அனலாகி.. தணலாகி..
அண்ணாமலையாகி..
புனலாகி.. ஊற்றாகி..
புலருகின்ற பொழுதாகி
கனலாகி.. காணுகிற
கார்த்திகை தீபமாகி..
உனதாகி.. எனதாகி..
ஔிருவதும் ஆதிசிவனே.!
கொப்பரையில் மலையுச்சி..
கொழுந்து விட்டெரிந்து
எப்புறத்தும் சிவஔியாய்..
பரவும் ஞான சுடராகி..
அப்புறத்தும் இப்புறத்தும்..
ஆனந்த வெள்ளமாகி..
செப்புகின்ற "சிவாயநம"
மந்திரமாய் முழங்கும் சிவனே.!
கைகூப்பி தலையுயர்த்தி..
காணுகின்ற தீபச்சுடரில்..
மெய்ப்பொருளை மனம்நாட..
மேகங்கள் கலைந்துவோட..
ஐயனவர் அண்ணாமலையார்
உடனாட உண்ணாமுலைத்தாய்
கையகத்தே தாங்கிநிற்கும்..
கருணைஔி அருணை சிவனே.!
வே.கல்யாண்குமார்.