tamilnadu epaper

அழகு நிலவே

அழகு நிலவே


வானத்து தேவதையொன்று

எனது இன்னல்களைக் களைய

உனது உருவில் வந்ததடி!

மனமகிழ்வைத் தந்ததடி!


எங்கள் குலம் காக்கும் 

குலதெய்வத்தின்

முகம் கண்டேனே! உன்னுருவில்

என் கண்மணியே!


அமுதமுண்டு சாகாவரம் பெற்றனரே தேவர்கள்!

உன் ஓர விழிப் பார்வையே 

எனது ஆயுளைக் கூட்டுமடி 

என் ஆருயிரே!


எங்களது வம்சம் காக்க வந்த வடிவழகே!

பூரண சந்திரனின் முகப்பொலிவே!


என் மனக் காயங்கள்

எல்லாமே

உன்னை ஆரத் தழுவ

ஆதவனைக் கண்ட பனி போல் விலகுமடி!


பசும்பொன்னே

முத்தமிழே

வாடா மலரே!!!!



-கோவைக்கவி புவனா

கோயமுத்தூர்