இமைப்பொழுதுக்கு முன்
இல்லாதிருந்த இடத்தில்
சட்டென அணி வகுத்திருக்கின்றன
சாரை சாரையாய்…
ஒரே தடத்தில்
எதிரும் புதிருமாய் மோதிக் கொண்டாலும் விபத்து நிகழ்வதில்லை
சுவரின்
சிறுதுளை வழியாய்
நீண்டிருந்தது வெளியில் வால்
உள் நோயாளியின்
மேசை மீதிருந்த
சர்க்கரைக் குடுவைக்குள் நுழைந்திருந்தது தலை
எல்லாம் …
அந்த மூடியும் மூடாதிருந்த
பாத்திரத்தின் விளைவு
சர்க்கரையின் ஈர்ப்பு சக்தியும் எறும்புகளின் மோப்ப சக்தியும்
எந்தப் புள்ளியில் எந்த நொடியில் சங்கமித்துக் கொண்டிருக்கக் கூடும்?
-ம.திருவள்ளுவர்