tamilnadu epaper

குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு


அன்னை மரியாளின்

அருந்தவப் புதல்வராய்

அவனியில் கிறிஸ்து அவதரித்தாரே!


இறைத்தூதர் இவராகி

இன்னல் நீங்க

வழி கண்டார்


தூய இதயம்

துன்பம் காணாது

துயர்கள் யாவும்

தகர்க்கும்

மருந்தாகும்


அன்புறச் சொன்னார்

பண்பு தந்தார்

அகிலம் வாழ

வழியும் கண்டார்


உடனிருந்து காட்டிக்

கொடுக்க

உத்தமர் இயேசு 

சிலுவை கண்டார்


பூவின் மென்மை

மேனியும் 

முள்ளின் வேதனை

தாங்கித் துடிக்க

விழிகளின் கண்ணீர்

இதழில் மறைய


மண்ணும் மரமும்

கண்ணீர் வடிக்க

நிலமும் நீரும் 

புலம்பித் தவிக்க

பிறந்த பிள்ளையும்

சோகம் தாங்க

அழுதனர் மக்கள்

துயரம் தாங்கி


பாவிகள் செயலால்

பாவம் தோன்ற


சிலுவை கண்ட இயேசுவும் 

சிதையா நெஞ்சம்

கொண்டார்


நல்வினைப் பயனாய்

மறித்த தேவன்

மீண்டு(ம்) வந்தார்


உலகம் உய்ய

உண்மை சொல்வோம்

உழைப்பை மட்டுமே 

அறுவடை செய்வோம் 

அன்பை விதைத்து

அனைவரும் வாழ்வோம்


தேவன் தந்த வாழ்வை

இதயத்தில் ஏற்போம்.

***************************

-தமிழ்நிலா