நீ கடந்துபோனபின் காத்திருக்கிறேன்..
யுக வினாடிகள்மீது
நங்கூரமிட்டிருக்குமென் பார்வை..
ஒவ்வொரு கணமொன்றிலும்
நின்று நிதானிக்கிறேன்..
மின்மினிப்பூச்சிகள் பறக்கும்
இரவெங்கும்..
கிறிஸ்து சிலுவை சுமந்து
கடந்துபோவதும் புலனாகிறது..
இத்தனை சவுக்கடிகள்பட்டும்
முள்கிரீடம் சூடி
தள்ளாடி தடுமாறி
நகர்ந்து வதைகையில்..
ஒருவாரம் முன்பு
அவரை உயரத்தில் வைத்து
வணங்கிய அதே மனிதர்கள்தானே இவர்களென
வெறுமையும் வேதனையுமாய்
இருந்தது..
காட்சிகள் கலைவதாயில்லை..
நீயும் இப்படித்தான்
வதைக்கிறாய் வலிக்கிறாய்..
ஆனபோதும்
நீ மறுபடி
வசப்படும்
கனவுகளுக்காக..
நீளுமென்
காத்திருப்பு..!
-ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்