tamilnadu epaper

உயிர்த்தெழுதல்

உயிர்த்தெழுதல்


உலகின் ஞான ஒளி நீயே...


மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாயே....


அன்பிற்கும்... ஜீவனுக்கும்...


மரணம் இங்கு ஏது?


புற உலகில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு..


உண்மை என்றும் புரியாது...


விசுவாசித்தவர்களுக்கு எல்லாம் கூடும்...


தெரு அற்றவர்களுக்கும்... தேரும் ஓடும்...


கசந்த வாழ்வும் சுகந்தமாய்... உருமாறும்..


உலகின் ஜீவநதி... உமக்கு..


பெருங் கசப்பை.. தாகத்திற்கு ஊட்டியது... உலகம்...




அக இருளின் ஆத்ம ஒளி நீ...



உம்மைக் காட்டிக் கொடுத்தது... சீடனின் துரோகம்...



ஆசைகளைச் சுமந்தவர்கள்..உமது தோளில் சுமத்தினர்..சிலுவையை...



ஞாலம் ஒளிர... உபதேசம் புரிந்த உமக்கு...


உபத்திரவங்களையே பரிசளித்தது...அதிகார வர்க்கம்...



அக்கொடிய நிலையிலும் நீர்... புரியவில்லை... தர்க்கம்...


தாங்கள் செய்வது இன்னதென்று.. அறியாமல் செய்கிறார்கள்"என அவர்களின் மன்னிப்பிற் காய்.. மனமுருகி..விண்ணப்பித்தாய்...





உயிர்த்தெழுந்து.. உண்மை விளக்கினாய்..


தேவனுடைய குமாரன் எனும் பெயரை நிரூபித்தாய்...


மாறும் உறவுகள் விடுத்து மாறாத இயேசுவைப் பற்றிக் கொள்வோம்...


பேரன்பும். பெருங்கருணையும்..


வாரி அணைக்கும் அரவணைப்பையும்...


கொண்டு கிறிஸ்துவில்...உயிர்த்தெழுவோம்...


விண்ணகத்து ஒளியை...கைத்தொழுவோம்....



ஈஸ்டர் பண்டிகை... கவிதை...


-தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி