tamilnadu epaper

இலக்கியத்தில் பெண்கள் அன்றும் இன்றும்.

இலக்கியத்தில் பெண்கள்   அன்றும் இன்றும்.

  

கால்களில் சலங்கை கலீர் கலீர் என்று சப்தமிட, இல்லையோ என்று எண்ணுகின்ற இடை அசைய பைய

நடை போடும் தையலாள் கையில்

எழுதுகோல் ஏந்தினால் என்ன என்று எண்ணம் அந்த சக்திகலைவாணிக்கு

தோன்றி இருக்குமோ!


ஆம்! அப்படி நினைக்கும் வகையில்

சங்க காலம் தொட்டே பெண்கள் எழுத்துலகில் தங்கள்  பாதம்

பதித்தனர்..


வளையல் அணிந்த கரங்களில் எழுது கோல், பல கதைகள், கவிதைகள்  பேசியது.


அறிவுரைகள், நீதிக் கதைகள், விழிப்புணர்ச்சி கதைகள், வீர பிரதாப

காவிய கதைகள், பக்தி ததும்பும் கதைகள், கவிதைகள் என பன்முக துறையிலும் பல எழுத்துக்கள்  சீறி பாய்ந்தன.


நெல்லுக் குத்தப் பாட்டு, நாத்து நட பாட்டு,

கோவில் திருவிழா பாட்டு, வாழ்தல் என்றாலும் வீழ்த்தல் என்றாலும் பாட்டு என்று பெண்களுக்கு இயற்கையிலேயே பாட்டு படிக்கும்

இயல்பு உண்டு.



பழம் பெரும் மூதாட்டி ஒவ்வையார் முதல், காரைக்கால் அம்மையார் ஆண்டாள், அள்ளுர் நன் முல்லை, இலவெய்னி, ஒக்கூர் மாசத்தியார், காக்கைப்பாடினி  நச்சள்ளையார், பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர் என்று  கணக்கிலடங்கா பெண்களின் பங்கு   இலக்கிய துறையில் அளப்பறியது.




அவர்களின் பாடல்களில் வீரம் தெறித்தது., அன்பு பெறுகியது

நட்பு இறுகியது.


ஒக்கூர் மாசாதியார் எழுதுகிறார் "


'கெடுக சிந்தை ; கடிது இவள் துணிவே ;

முத்தின மகளிர் ஆகுதல் தகுமே

மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை

யானை எறிந்து களத்து ஒழிந்தன்னா'


முதல் நாள் போரில் கணவனை பறிக் கொடுத்தவள், அடுத்தநாள் மகனை

போருக்கு அனுப்புவது எத்தனை துணிவு என்று பெண்ணின் வீரத்தை, திட மனதை, ஒரு பெண் வடிக்கின்றாள் என்றால் என்னே எழுத்தின் வலிமை.

இவரது பாடல்கள் புறநானுரிலும், குறுந்தொகையிலும் இடம் பெற்று உள்ளன.


தந்தையை இழந்து கபிலருடன் செல்லும் பாரி மகள்கள் அந்த நேரத்திலும், துக்கத்திலும்

" அற்றை திங்கள் இவ் வென்னிலாவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் ; யாம் எந்தையும் இலமே " என்று

' எங்கள் நாட்டையும் எடுத்துக்கொண்டார் எங்கள் தந்தையையுமே என்று பொறுள்பட

பாடினார்கள்.

துக்கத்திலும் சங்க கால பெண்டிர் பொருந்த பாட்டு படிப்பது வியப்பே!


சங்க காலம் முடிந்த இந்த  20 நூற்றாண்டிலும் பல பெண் எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.


அவர்களுள் ஒருவர் இஸ்லாமிய மதத்தை  சேர்ந்த 'சித்தி ஜனதா பேகம்.,'

3 வது வரையே படித்தவர்.

முதல் இஸ்லாமிய எழுத்தாளர்என்ற பெருமைக்கு உரியவர்.

நாகூரில் பிறந்த இவர் தன்னுடைய 16 வயதில் எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் கற்று, ' காதலா கடமையா, என்று இஸ்லாமிய பெண்கள் விடுதலைப்பு  பற்றிய புத்தகத்தை அழகாக எழுதி உள்ளார்.


மகிழம்பு, கற்பின் மாண்பு இவரது பிற நாவல்கள்.



சொல்லிக்கொண்டே போகலாம்.


1955 வருடம்தான் முதன் முதல்

' சாஹித்யா அகாடமி விருது ' வழங்க ஆரம்பிக்கப்பட்டது..


ஆண்கள் கோலோச்சிய கால கட்டத்தில் அவர்களுக்கு சிறிதும் தாழ்ந்தவர்கள் இல்லை பெண்கள் என்று உணர்த்தி அதை பெற்ற திருமதி

ராஜம் கிருஷ்ணன் (1973)

லட்சுமி திரிபுரா சுந்தரி (1984)

திலகாவதி (2005)

அம்பை (2021)

போன்றவர்கள் 


எழுத்துலக அரசிகள்.


ஔவையாரில் துவங்கி இன்று,

சுதா மூர்த்தி, அனிதா தேசாய், சித்ரா பேனேர்ஜி, கிரண் தேசாய், சிவ சங்கரி, இந்துமதி, ஆர். சுடாமணி போன்ற இன்னும் பலர் இந்த கால கட்டத்திற்கேற்ப சமூக நலத்திற்கேற்ப கதைகள் பூனைந்து எழுத்துலகை ஆக்கிரமித்து வருகின்றனர்.


ஆர். சுடாமணியின் ' செந்துரு ஆகிவிட்டாள் ' கதை, பெண்களுக்கு குடும்ப பராமரிப்பை தாண்டி, தனக்கு

பிடித்ததை செய்ய துணிவு வேண்டும்

என்ற கருத்தை வலியுறுத்துகிறது.


இதைப் போன்று பல கதைகள், கவிதைகள் காலத்திற்கேற்ப் புனயப் 

படுவது  நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.


வயது ஒரு தடை இல்லை என்று 70 தாண்டியும், எழுத துவங்க முடியும் என்று மன உறுதியுடன் எழுதிவரும்

சில மூத்த பெண்மணிகளும் ஒரு நாள்  இலக்கியத்தில் இடம்பெறுவார்கள் 

என்ற நம்பிக்கையே  அவர்கள் வாழ்க்கையின்

உன்றுகோல்.


அன்றும் இன்றும் என்றும் இலக்கியம் படைப்பதில் பெண்களின் பங்கு

முக்கிய இடம் வகிக்கிறது என்பதில்

ஐயமில்லை எனலாம்.


-உஷா கண்ணன்