கலைமாமணி விக்ரமன் அவர்கள் நடத்தி வந்த இலக்கியப் பீடம் தரமான இலக்கிய இதழில் மாதம்தோறும் தொழிலதிபர் மாம்பலம் ஆ சந்திரசேகர் எழுதி வந்த 30.கட்டுரைகளை தொகுத்து இலக்கியப் பீடம்..
3.. ஜெய்சங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை..33 என்ற முகவரியில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் 184 பக்கங்கள் கொண்ட ரூபாய் 150 விலை கொண்ட பயனுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்றால் மிகையல்ல. 30 வகையான தலைப்புகளில் சிந்தனைக்குரிய கட்டுரைகளை தந்து அதற்குரிய மூலம். . தீர்வுகள். . அதற்கான செயல்கள் இந்த நான்கையும் இணைத்து கட்டுரையாக தந்திருக்கிறார் ஆசிரியர். .. நல்லாசியர் சொல் பலிக்கும் என்கிற கட்டுரையில். . படிப்பு என்பது வேலைக்காக மட்டும் இல்லை. . பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக வாணிபத்தின் முதலாளியாக உருவாக வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
1876..78 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இயற்கையின் சக்தி எவ்வளவு வீரியமிக்கது என்பதை உணர்த்திருக்கிறார். மழை இல்லாவிட்டால் இந்த நாட்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய வைக்கின்ற கட்டுரையாக இது தெரிகிறது.
50க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் இவர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்தபோது சீனப் பெருஞ்சுவரை கண்டு வியந்து அதைப் பற்றி எழுதி இருக்கின்ற கட்டுரை நாம் சீனப் பெருஞ்சுவரை நேரில் கண்டு மகிழ்கின்ற உணர்வை தந்தது. சீனப் பெருஞ்சுவர் ஏன் கட்டப்பட்டது என்கிற தகவலை கட்டுரையில் தந்திருப்பது மிகவும் சிறப்பு.
நூலகமே வாழ் உலகம் என்கிற தலைப்பில் நூலகம் பற்றி உலக அறிஞர்கள் விஞ்ஞானிகள் கவிஞர்கள் கூறியவற்றையும் குழந்தைகள் நூலகத்தில் படித்து பயன்பெற்று அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். நூலகம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள சாதனம். . .
மனநலம் மனிதருக்கு ஆக்கம் எனும் தலைப்பில் இவர் எழுதியுள்ள மனநலம் பற்றிய கட்டுரை சிந்திக்கவும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படவும் வைக்கின்ற அற்புத வழிமுறைகள் நிறைந்த கட்டுரை. ..
உணர்ச்சி தான் நட்பா. .. என்கிற தலைப்பில் இவர் நட்புக்கு கொடுத்திருக்கின்ற விளக்கம் நண்பர்கள் எப்படி நம்மிடம் பழக வேண்டும் நாம் நண்பர்களிடம் எப்படி பழக வேண்டும் உதவிகள் புரிய வேண்டும் என்பதைப் பற்றி இலக்கிய சான்றோடு தந்திருப்பது சிறப்பு.
இவருக்கு திருக்குறள் மீது மிகவும் நாட்டம் என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் திருக்குறள் இடம் பெற்று இருப்பதை காண முடிகிறது. திருக்குறள் பற்றாளர் ஆன இவரை பாராட்டலாம்.
காந்தி தேசம். .. என்கிற இவரின் கட்டுரை காந்தி தன் வாழ்வில் எவ்வளவு சோதனைகளை சந்தித்தார் அதன் விளைவாக அகிம்சையை தேர்ந்தெடுத்து இந்தியாவிற்கு சத்திய முறையில் போராட்டம் நடத்தி விடுதலை வாங்கித் தந்தார் என்பதை மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
காதல். . திருமணம் ஆகிய தலைப்புகளில் கட்டுரை தந்திருக்கும் இவரின் சிந்தனை முற்றிலும் வித்தியாசமாக திகழ்வது ரசிப்பு.
வெண்பாற் புலவர்கள். . என்கிற தலைப்பு ..இவர் எழுதி இருக்கின்ற கட்டுரையில் அவ்வையார் ஆதிமந்தி உள்பட 57 பெண் பார் புலவர்கள் சங்க இலக்கியத்தில் பாடல்களை தந்து தமிழுக்கு தொண்டு செய்து இருக்கிறார்கள் என்பதை சான்றுடன் விளக்கி இருப்பது நமக்கு வியப்பை தருகிறது.
பெண் என்னும் பெரும் சக்தி.... என்கிற கட்டுரையில் பெண் அடிமை தனத்தை சாடி பாரதியார் பாரதிதாசன் கலைமாமணி விக்ரமன் உள்ளிட்டோர் செய்திட்ட பணிகளை எல்லாம் பட்டியலிட்டு தந்திருக்கிறார். பெண் விடுதலை என்பது ஆண்களின் கையில் தான் இருக்கிறது. ஆண்கள் பெண்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் தந்தால்தான் இல்லறம் இனிக்கும் பெண் சுதந்திரம் அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கும் இந்த கட்டுரை ஆண்களை சிந்திக்க வைக்கும் பெண்களை பெருமைப்பட வைக்கும். ..
30 கட்டுரைகளும் முத்தானவை சத்தானவை படிக்க தேவையானவை படித்து பயன்பெற வேண்டியவை. வாய்ப்பு இருப்போர் அவசியம் வாங்கி படியுங்கள். பயன்பெறுங்கள்.
-ந. சண்முகம்
திருவண்ணாமலை