tamilnadu epaper

ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு

ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு


 புனித வெள்ளி கிழமையில் சிறைபிடிக்கப்பட்டு சிலுவையில் பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த பண்டிகையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.


 அன்று நடந்த சம்பவத்தின் தொகுப்பை பார்க்கலாம்.



 வாரத்தின் முதல் நாள் இயேசுவின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் வேறு சில பெண்களும் இயேசுவை அடக்கம் பண்ணியி ருந்த கல்லறையி டத்தில் போனார்கள். அங்கு தேவதூதன் வந்து கல்லறையை அடைத்திருந்த கல்லை புரட்டி தள்ளிவிட்டு அங்கே உட்கார்ந்து இருந்தான். அவன் அந்த பெண்களைப் பார்த்து யாரை தேடுகிறீர்கள் என்றான். அவர்கள் இயேசுவின் உடலுக்கு வாசனை திரவியங்கள் போடுவதற்கு வந்தோம் என்கிறார்கள். தேவதூதனோ அவர் இங்கு இல்லை அவர் உயிரோடு எழுந்தார் அவரை வைத்த இடத்தை பாருங்கள் என்று சொல்லி காட்டினான்.. பின்னும் தேவ தூதன் அவர்களை நோக்கி அவர் உயிர்த்தெழுந்தார் என்று அவருடைய சீஷரிடமும் அவருடைய சகோதரரிடமு ம் போய் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டான். இவைகளை சொல்வதற்காக அவர்கள் ஊருக்கு சென்ற பொழுது, இயேசு தாமே அவர்கள் கூட நடந்து சென்றார். அவர்களிடமும் உயிர்த்தெழுந்த இயேசு யாரை தேடுகிறார்கள் என்று கேட்கிறார். அவர்கள் அவரை அறியாமல் இயேசுவை தேடுகிறோம் என்று சொல்லுகிறார்கள். அவர் நான் தான் ஏற்கனவே சொன்னபடி உயிர்த்தெழுந்தேன் என்று கூறுகிறார். பின்னர் இந்த செய்தியை சீஷர்களுக்கும் தெரிய வருகிறது. அவர்களும் நம்ப மறுக்கிறார்கள். நடந்ததை கல்லறையை காவல் காத்த போர் வீரர்கள் கேள்விப்பட்டு அதை காவல் காத்தவரிடம் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று சொன்னால் நாம் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும் யாரோ அவரை அவருடைய உடலை திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று சொல்லுங்கள் என்று அவர்களுக்கு பணமும் கொடுத்தார்கள். இந்த செய்தி இன்று வரை யூதர்களிடம் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது. சீசர்கள் நம்பாமல் கேள்விப்பட்டு சென்ற பொழுது, இயேசு அவர்களுடன் நடந்து செல்கிறார். அவர் கண்களுக்கு அவர் தெரியவில்லை வழிப்போக்கன் போல் பேசிக்கொண்டே செல்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு அப்பத்தை ஆசீர்வதித்து கொடுக்கிறார். அப்பொழுது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை காண்கிறார்கள். அவருக்கு அன்பாய் இருந்த தோமா என்கிற தாமஸ்... நான் நம்ப மாட்டேன். அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட காயத்தில் என் கையை போட்டு பார்த்தால் ஒழிய.... கையில் இருக்கின்ற காயங்களில் என் விரலை வைத்து பார்த்தால் ஒழிய நம்ப மாட்டேன் என்று சொல்லி இருந்தான். அவன்தான் இயேசுவுக்கு மிகவும் அன்பான சிஷன்.. அவனிடம் கையைக் காட்டி என்னுடைய காயங்களை பார்! உன்னுடைய கையை என் விலாவில் இருக்கிற காயத்தில் வைத்துப் பார்!நம்பிக்கை இல்லாமல் இருக்காதே!நம்பிக்கையோடு இரு என்பார். 


அதன் பிறகு அவர் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார் . அந்த இடம் ஒலிவ மலை. அவர் எந்த ஒலிவ மலையிலிருந்து மேலே ஏறிப் போனாரோ அதே ஒலிவ மலையில் வந்து மீண்டும் இறங்குவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அவர் உயிர்த்தெழுந்ததை நம்பாத யூதர்கள் தான் அவரது உடலை திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று கதை கட்டி விட்டார்கள். இயேசு உயிர்த்தெழுதலை நம்பியவர்கள் கிறிஸ்தவர்கள் எனப்படுகிறார்கள். நம்பாதவர்கள் இன்னும் யூதராக தொடர்கிறார்கள்.



 இந்த உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகையாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.



-தே. ராஜா சிங் ஜெயக்குமார்

தஞ்சாவூர்.