பாடலிபுத்திராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குப்த பேரரசர் சக்ராதித்யா மன்னர்களால் கி.மு. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் உலகின் முதல் பல்கலைக்கழகமான நாளந்தா தொடங்கப்பட்டது.
சீனப்பயணி யுவான் சுவாங் கி.பி.673 முதல் கி.பி.687 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். நாளந்தாவில் அவர் 10 ஆண்டுகள் தங்கினார். ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
நாளந்தாவைப் பற்றி அறிய யுவான் சுவாங்கின் குறிப்புகளே நமக்கு உதவுகின்றன. அவர் நாளந்தாவில் தங்கியிருந்த காலத்தில் புத்த நூல்களின் படிகளை ஆழ்ந்து ஆராய்ந்தார்.அவர் நாளந்தா பல்கலைக்கழக வளாகம் தர்மகஞ் என்று அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகம் ரத்னா சாகர், ரத்னா தண்டி , ரத்னா ரஞ்சக்,
என்ற பெயர்களில் மூன்று கட்டங்களில் இயங்கியதாக யுவான் சுவாங் கூறியுள்ளார்.
ரத்னா தண்டி ஒன்பது மாடிகளைக் கொண்டு பெரிய நூலகத்தோடு விளங்கியது.
மொத்தமாக எட்டு அரங்குகளையும் 300 அறைகளைக் கொண்டது நளந்தா. பொதுவான உணவு கூடம் கிணறுகள் இருந்தன. அறைகள் ஒருவர் அல்லது இருவர் தங்கும் வசதிகளை கொண்டிருந்தன. ஒவ்வொரு விடுதி மாணவரும் உறங்குவதற்கு சபூத்ரா என்ற பெயரில் கல்லாலான படுக்கை வழங்கப்பட்டது.
மாணவர் விடுதி அறை ஒவ்வொன்றிற்கும் விளக்குகளையும் சுவடிகளையும் வைக்க தனியே வசதி செய்யப்பட்டு இருந்தது. நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என விடுதியின் அறைகளிலேயே இருவரும் தங்கி உள்ளனர்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர் 10 விண்ணப்பதாரர்களில் மூவர் மட்டுமே சேர முடிந்தது. ஒரே நேரத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பத்தாயிரம் மாணவர்களும் 2000 ஆசிரியர்களும் இருந்தனர் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட்டுள்ளது.
குப்த மன்னர்கள் இப்பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்காக 200 கிராமங்களைக் கொடையாக அளித்தனர்.
நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மதம் சார்ந்ததாக விளங்கியதால் இதன் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் பெரும் துறவிகளாகவும் புத்தபிக்குகளாகவும் இருந்தனர். இங்கு சமஸ்கிருதம் கற்பதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் சீனா, கொரியா,ஜப்பான், திபெத், மங்கோலியா, துருக்கி, இலங்கை, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கி பயின்றுள்ளனர். அந்தக் காலத்திலேயே நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரம் மைல்கள் கால்நடையாக நடந்தும் மட்டக் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் கழுதைகளிலும் பயணம் செய்து இவர்கள் நாளந்தாவை அடைந்துள்ளனர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பக்தியார் கில்ஜி என்ற வம்சத்தை மன்னரால் நாளந்தா தீட்டு கொளுத்தப்பட்டதாக வரலாற்றாளர்கள் கூறியுள்ளனர்
இதன் சிதைவடைந்த கட்டிடங்கள் மலை போன்ற மண்மேடுகளுக்குள் புதைந்து விட்டன. இந்த பகுதியில் புதைபொருள் ஆய்வுகளை மேற்கொண்ட அலெக்சாண்டர் கனிங்ஹாம் மண்மேடுகளை அகற்றி அதில் புதைந்திருந்த நாளந்தாவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளி உலகுக்கு அடையாளம் காட்டினார்.
2006 ஆம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என யோசனை தெரிவித்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசு
ரூ 27,000 கோடி ஒதுக்கியது. இதில ஏழு பாடப்பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்கான கல்வி 2020 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது.
உலகின் முதல் பல்கலைக்கழக கருதப்படும் 800 ஆண்டுகள் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் பீகாரின் ராஜ்கீரில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் செயல்பட தொடங்கியது. பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் சிதைக்கப்பட்ட பண்டைக்கால நாளந்தாவிலிருந்து
12 கி.மீ. தூரத்திலும் புதிய நாளந்தா பல்கலைகழகம் அமைந்துள்ளது.
40 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கு அதிகமானோர் இங்கு படிக்க விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் முதல் வேந்தராக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் நிர்வாக குழுவில் இடம் பெற்றனர். தற்சமயம் வேந்தராக இருப்பவர் புரெபசர் அரவிந்த் பனகரியா. நாளந்தா பல்கலைக்கழகத்தை யுனஸ்கோ அமைப்பு 2016 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவித்தது.
-க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.