எங்கள் ஊர் குஜிலியம்பாறை வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். குஜிலியம்பாறை திண்டுக்கல் நகரிலிருந்து 44 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 24 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டத்தில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
குஜிலியம் பாறை வட்டம் தமிழ் நாட்டிலேயே வறடசி யான வட்டங்களில் ஒன்றாகும் மாணாவாரி விவசாயமே இங்கு அதிகளவில் நடக்கிறது
எங்கள் ஊர் குஜிலியம்பாறை திண்டுக்கல் மாவட்டத்தின் வருவாய்த் தொகுதி ஆகும் . வருவாய்த் தொகுதி 17 பஞ்சாயத்து கிராமங்களைக் கொண்டுள்ளது.
அவை, ஆலம்பாடி, சின்னுலுப்பை, டி.குடலூர், தோளிப்பட்டி, கரிகாளி, கருங்கல், கூம்பூர், கொட்டாநத்தம், லந்தகோட்டை, மல்லாபுரம், ஆர்.கோம்பை, ஆர்.புதுக்கோட்டை, ஆர்.வெள்ளோடு, திருக்குர்ணம், உள்ளியக்கோட்டை, வடுகம்பாடி, வாணிகரை.
திண்டுக்கல் மாவட்டத்தின் 10ஆவது வட்டமாக உருவாகியுள்ள குஜிலியம்பாறையில் 3 குறுவட்டங்களுக்குள்பட்ட 24 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள வேடசந்தூர் வட்டம், 946 சதுர கிலோ மீட்டரில் பரப்பளவில் பெரிய வட்டமாக இருந்தது. இதனால், குஜிலியம்பாறையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வர 100 கி.மீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஒரே வட்டாட்சியரைக் கொண்டு, பரப்பளவில் பெரிய வட்டத்திலுள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேடசந்தூர் வட்டத்தினை 2 ஆகப் பிரித்து, குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ச.பழனிச்சாமி சார்பில் குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என பேரவையில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் குஜிலியம்பாறையை தனி தாலுகாவாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வட்டம் 423.76 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், வேடசந்தூர் வட்டம் 522.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் இருக்கும் வகையில் எல்லை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் வட்டத்தில் இடம் பெறும் 39 கிராமங்கள் விவரம்: ஸ்ரீராமபுரம், மல்வார்பட்டி,இ.சித்தூர், மாரம்பாடி, நல்லமனார்கோட்டை, எரியோடு, உசிலம்பட்டி, வெல்லம்பட்டி, அம்மாபட்டி (எரியோடு குறுவட்டம்), வடமதுரை, வேல்வார்கோட்டை, பிலாத்து, காணப்பாடி, ராமநாதபுரம், பாடியூர், தென்னம்பட்டி, பெரும்புள்ளி, குளத்தூர், சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம் (வடமதுரை குறுவட்டம்), அய்யலூர்,அ.கோம்பை, பஞ்சந்தாங்கி, சித்தூவார்பட்டி, பாகாநத்தம், புத்தூர், மோர்பட்டி, கொல்லப்பட்டி, சுக்காம்பட்டி, கொம்பேறிப்பட்டி(அய்யலூர் குறுவட்டம்), வேடசந்தூர், வி.புதுக்கோட்டை, குட்டம், பூதிபுரம், கைத்தியன்கோட்டை, கல்வார்பட்டி, நத்தப்பட்டி, பாலப்பட்டி, கூவக்காப்பட்டி(வேடசந்தூர் குறுவட்டம்).
குஜிலியம்பாறை வட்டத்தில் இடம் பெறும் 24 கிராமங்கள் விவரம்: ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், லந்தகோட்டை, கருங்கல், தீண்டாக்கல், ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிப்பட்டி, டி.கூடலூர்(கோட்டாநத்தம் குறுவட்டம்), பாளையம், கூம்பூர், மல்லப்புரம், வாணிக்கரை, ஆர்.புதுக்கோட்டை, உல்லியக்கோட்டை, சின்னுலுப்பை, கரிக்காலி(பாளையம் குறுவட்டம்), குளத்துப்பட்டி, குடப்பம், வெம்பூர், நல்லூர், நாகையக்கோட்டை, வடுகம்பாடி, ஆர்.கோம்பை(கோவிலூர் குறுவட்டம்).
குச்சில் என்றால் தமிழில் சிறிய வீடு என்று பொருள்.
குச்சில் > குஜில் என மருவி இருக்க வாய்ப்புண்டு.
குஜிலியம் பாறை (குச்சிலியன் பாறை) என்றால் சிறியவீடுகளும் பாறையும் உள்ள பகுதி என்று பொருள்.