tamilnadu epaper

எங்கள் ஊர் செயங்கொண்டம் சிறப்புகள்

எங்கள் ஊர் செயங்கொண்டம் சிறப்புகள்

 

அரியலூர் மாவட்டம்  உடையார்பாளையம் வட்டத்தில்  இருக்கும் 21 உறுப்பினர்களுக்கு கொண்ட முதல்நிலை  நகராட்சி எங்கள் ஊர் செயங்கொண்டம் ஆகும்.கரடிகுளம், பாப்பாங்குளம், மேலக்குடியிருப்பு, கீழக்குடியிருப்பு, கண்ணாரப்பாளையம், சூரியமணல், செங்குந்தபுரம், மணக்கரை, சின்னவளையம், குஞ்சிதபாதபுரம் ஆகிய பகுதிகள் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளாகும். 

 

2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரம் கிட்டதிட்ட 70000 மக்கள்தொகை கொண்டது. 21 வார்டுகளும்,கிட்டதிட்ட 12000 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் கொண்ட இந்நகரத்தின் எழுத்தறிவு 80.34% ஆகும். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1031 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3520 ஆகவுள்ளது. 

 

இதன் அருகிலுள்ள விமானநிலையம், திருச்சி விமானநிலையம் ஆகும். 

 

எங்கள் செயங்கொட்டத்தை உள்ளடக்கிய அரியலூர் மாவட்டம் சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால்  பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மக்கள் தொகையை ஏற்று கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இரண்டாக பிரித்து தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல்  உருவாக்கப்பட்டது.

இங்கு சுண்ணாம்புக் கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி  என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. 

 

சிமெண்ட் தவிர நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிக அளவில் படிமங்களாகக் கிடைக்கிறது, இதனையடுத்து தமிழக அரசும் செயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 

 

செயங்கொண்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து அய்யப்பனை வழிபடுவது வழக்கம். செயங்கொண்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அய்யப்பனை வழிபடுவார்கள். 

 

அரியலூர், கும்பகோணம் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை செயங்கொண்டத்திற்கு அருகில் உள்ள இரு முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. 

 

செயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் திருவாரூர் ,மயிலாடுதுறை , துறையூர், திட்டக்குடி, தருமபுரி, சேலம் அரியலூர், திருச்சி, சிதம்பரம், மதுரை, பழனி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், ஒசூர், பெங்களூரு, பெரம்பலூர், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

 

எங்கள் செயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாடர்ன் மெட்ரிக்குலேசன் பள்ளி, பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி போன்ற பள்ளிகள் உள்ளன.அஞ்சல் குறியீட்டு எண்: 621801 ஆகும். 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில்  செயங்கொண்டம் ஊராட்சியும் ஒன்றாகும். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயங்கொண்டத்தில் இயங்குகிறது. 

 

தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் செயங்கொண்டமும் ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செயங்கொண்டம் ஆகிய  தொகுதிகளை கொண்டது. தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் பெரிய கோவிலை கட்டினான். அவரது மகன் ராஜேந்திரசோழன் கங்கை கொண்டசோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றார். அதன் நினைவாக தஞ்சை பெரிய கோவிலை போல கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்தார். யுனெஸ்கோ நிறுவனம் இந்த கோவிலை உலக புராதன சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க கோவில் செயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ளது.

சோழ மன்னரால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான பொன்னேரி. இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது இந்தியாவிலேயே பழுப்பு நிலக்கரி உள்ள பகுதி செயங்கொண்டம் பகுதியாகும். 

 

செயங்கொண்டம் தொகுதியில் 1 நகராட்சி, 2 பேரூராட்சி, செயங்கொண்டம், தா.பழுர் என 2 ஊராட்சி ஒன்றியங்களும் செயங்கொண்டம் ஒன்றியத்தில் 35 கிராம ஊராட்சிகளும், தா.பழுர் ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளும் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அழகிய மலைகளுக்கு மத்தியில் செயங்கொண்டம் வரதராஜ பெருமாள் கோவில் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக செல்வாக்கின் ஒரு பெரிய அடையாளமாக உள்ளது சர்வ வல்லமையுள்ள விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனித ஆலயம் 108 திவ்ய தேசங்களின் உண்மையான அதிசயமாகும்.

 

 

செயங்கொண்டம் வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் கிரீடத்தில் ஒரு உண்மையான ரத்தினம். மேலும் கட்டிடக்கலை நுணுக்கம் , கலை பிரகாசத்தின் அற்புதம், மற்றும் மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு புனிதமான ஆலயம் இதுவாகும் 

 

போர்க்களம் கண்டு, வெற்றி வாகைசூடி, மாமன்னன் இராஜேந்திரசோழனால் வைக்கப்பட்ட பெயரே! இந்த செயங்கொண்டசோழபுரம் என்னும்பெயராகும். 

 

பிற்கால சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரம், செயங்கொண்டசோழபுரத்தில் சோழனின் அரண்மனை ஒன்றும் இருந்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது. 

 

உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சிறீ பயற்ணீநாத சுவாமி ஆலயம் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

-விக்னேஷ் 

மதுரை