tamilnadu epaper

எங்கள் ஊர் தென்காசி சிறப்புகள்

எங்கள் ஊர் தென்காசி சிறப்புகள்

எங்கள் ஊர் தென்காசி மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை

தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. 

 

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[3] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (பொ.ஊ. 1422–61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. 

 

தென்காசிக்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு 

 

• ராமநதி அணை 

 

• உலக அம்மன் கோவில் 

 

• குற்றாலம் 

 

• ஐந்தருவி 

 

• புலியருவி 

 

• பழைய குற்றாலம் 

 

• குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை) 

 

• திருமலைக் கோவில் 

 

• அடவிநயினார் நீர்த்தேக்கம் 

 

• அச்சன்கோவில் (கேரள மாநிலம்) 

 

• கருப்பாநதி அணைக்கட்டு 

 

• கடனாநதி அணைக்கட்டு 

 

• செண்பகதேவி அருவி 

 

• பாலருவி 

 

• தோட்டக்கலை துறை பூங்கா-ஐந்தருவி 

 

• படகு குழாம்-குற்றாலம் 

 

• திருமலை குமார சுவாமி கோவில்-பண்பொழி 

 

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர்  உயரத்தில் இருக்கின்றது.

 

 

தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.

 

 

தென்காசி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியும் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. 

 

இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது

 

 

தென்காசி மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.

 

மாரிமுத்து (நடிகர்)

தென்காசி