tamilnadu epaper

எங்கள் ஊர் பத்தமடை சிறப்புகள்

எங்கள் ஊர் பத்தமடை சிறப்புகள்

எங்கள் ஊர் பத்தமடை  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும். 

 

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கிமீ); மேற்கே சேரன்மாதேவி (4 கிமீ); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கிமீ) உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், சேரன்மாதேவி]]யில் உள்ளது. 

 

7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது 

 

எங்கள் ஊர் பத்தமடையில் வில்வநாத சுவாமி கோயில் என்ற புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் வில்வநாதர், உமைய பார்வதி சன்னதிகளும், மூன்று உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. 

 

மேலும் எங்கள் பத்தமடையில் கரியமாணிக்க பெருமாள் கோவில் என்ற பெருமாள் கோயிலும் உள்ளது.இக்கோயிலில் கரியமாணிக்கப் பெருமாள், அலமேலு மங்கம்மாள், சோமநாத நாயகி சன்னதிகளும், கருடாழ்வார், தன்வந்தரி, நவநீத கிருஷ்ணன், இராமானுஜர், சேனை முதல்வர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில்

என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. 

 

மேலும் எங்கள் ஊர் பத்தமடை பாய் உலகப் புகழ் பெற்றதாகும் .தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால் நெய்யப்படும் பாய்கள். இப்பாய்கள், 100 முதல் 140 பாவுப் பருத்தியாலோ பட்டு இழைகளாலோ நெய்யப்படுகின்றன.

பிற பாய்களை விட இவை மெல்லியதாகவும், மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் உடலுக்கு ஏற்றதாகவும் உள்ளன.பத்தமடைப் பாய் புவிசார் தகுதி பெற்று, புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது 

 

பத்தமடைப் பாயின் நெசவுமுறை அரியது மட்டுமல்ல, மிகுந்த நேரத்தைஎடுத்துக் கொள்ளும். இதை நெய்யும் கைத்தொழிலும் கலையும்மிக நுட்பமான வடிவமைப்புகளைப் பிணைமுறையும் இந்த வட்டாரத்துக்கே உரிய தனிதன்மை உடையதாகும்.இந்த பாய் நெய்வதற்கான கோரைப்புல் சதுப்பு நிலங்களில் ஆற்றுப் படுகைகளிலும் வளர்கிறது. 

 

சந்தையில் கிடைக்கும் பத்தமடைப் பாய்களில் மூவகையுண்டு. இந்த வகைபாடு நெசவுமுறை சார்ந்தமைகிறது.இவை, முரட்டு நெசவு வகை. நடுத்தர நெசவு வகை, நுண் நெசவு வகை என்பனவாகும். நுண்வகைப் பத்தமடைப் பாயை நெய்ய பயன்படும் கோரையின் புறவுறை உரித்து கிடைக்கும் நுண்புரி பயன்படுகிறது.