எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள தேர்வு நிலைப் பேரூராட்சி மம்சாபுரம் ஆகும்.முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை ஆற்காட்டு படைகளில் போர் வீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார்ர். ஆங்கிலேயரும் ஆற்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளானதமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். முகமது யூசூப் கான்.மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு மிக அருகில் மம்சாபுரம் உள்ளதால், இப்பகுதியில் விவசாயம் முக்கிய வேலையாக உள்ளது. சாலை போக்குவரத்து இந்த நகரத்தை மற்ற
இரண்டு கிலோ மீட்டர் கடந்ததும், கல்மண்டபம் என்றொரு இடம்வரும். அந்தக் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிருந்த யானையை இரவு வேளையில் இங்குவந்துதான் கட்டிப்போடுவார்களாம். கற்களால்மட்டுமே அந்த மண்டபம் எழுப்பப்பட்டிருக்கும். சிறியதுதான். பயணக் களைப்பில் வருவோர் போவோரெல்லாம் சற்று களைப்பாறட்டும் என்ற உயர்ந்த நோக்குக்காக இன்று அந்த மண்டபம் யானை இழந்து நிற்கிறது. சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த "பூ "திரைப்படத்தின் முகப்புப் பாடலை இந்த மண்டபத்தைச் சுற்றித்தான் எடுத்தார்கள். அவ்வளவு எளிமையான, அருமையான இடம் இந்தக் கல்மண்டபம்.
மம்சாபுரம் ஊரைச்சுற்றி யானைக் கூட்டம் பரந்து விரிந்து இருப்பதுபோல் மேற்குத் தொடர்ச்சி மலை விரிந்திருக்கும். இதுதான் ஊரை அரணாய் … ஒரு தாயைப்போல பார்த்துக் கொள்கிறது. எந்த வித இயற்கை பேரழிவு இந்த ஊருக்குள் வந்ததில்லை. முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மலையிலிருந்து வடிந்து வரும் மழை நீரைச் சேமிக்க சிறுசிறு கண்மாய்களாக கட்டியுள்ளனர். மலையில் மழை பெய்தால் ஆறு, கிணறு, ஓடை என எங்கும் நீர் கரைபுரண்டோட ஆங்காங்கே வண்ணமலர்கள் பூத்தாடும். சில நேரங்களில் மலையிலிருந்து விநோதமான ஜந்துக்கள், மலைக்க வைக்கும் மலைபாம்புகள் தண்ணீரோடு தண்ணீராய் ஊருக்குள் வந்து மக்களைப் பீதிகொள்ளச் செய்யும்.
கண்மாய் நிறைந்ததும் விதவிதமான பறவைகள் பறந்து திரியும். நிறைய மீன்கள் சலுகை விலைக்குக் கிடைக்கும். கிணறு நிரம்பி வழிவதால் சுண்டான் நண்டான் எல்லாம் நீச்சல் கற்றுக்கொண்டு, ஆனந்தப்படுவர். இப்படிப் பட்ட காலத்தில் வடிந்தோடும் தண்ணீரைச் சேமித்து வைத்து விவசாயத்திற்கு உதவும்படி செய்திருக்கிறார்கள். இன்றும் இந்தக் கண்மாய்கள் நிறைந்தால்தான் ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தீரும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைதான் இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாய் இருந்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் தூயக் காற்றும், மூலிகை மணமும் அவ்வூர் மக்களை எந்த நோக்காடும் எதுவும் செய்யாதுபடிக்குக் குணப்படுத்துகிறது. செண்பகா நீர்வீழ்ச்சி, சறுக்காம்பாறை, காட்டழகர் கோயில், செண்பகத்தோப்பு இன்னும் பிற அரிய இடமெல்லாம் அங்குதான் உள்ளன.
சிவந்திபட்டி மகமைக்குட்பட்ட பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு சாதி, மதம் பேதமில்லாம் எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள். இதன் ஆரம்ப காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல் எம்.ஜி.ஆர். இங்கு வந்து நாடகம் ஒன்று நடத்தி, அதன்மூலம் வசூலான பணத்தை இந்தப் பள்ளிக்காக உதவியிருக்கிறார். இந்தப் பள்ளியில் படித்த எத்தனையோ பேர், வெளிநாடுகளுக்குச் சென்று இன்று பெரிய பெரிய கம்பெனியில் இருக்கிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பெரிய பெரிய பதவி வகிக்கிறார்கள்.
திருவிழாக் காலங்களில் ஊரே கூத்தாடும். ஒரு வாரம், பத்து நாள்கள் எனத் திருவிழாக்களின்போது குடும்பம் குடும்பமாய் கூடி கும்மாளமிடுவர். இந்த நாள்களில்தான் வெளியூருக்குப் போயிருந்தவர்கள் ஒன்றுகூடுவார்கள்.திருவிழாவில் களைகட்டுவது வெட்டுக்குதிரை என்கிற சாரி ஓட்டம்தான்.