நூலாசிரியர்:
குடந்தை பரிபூரணன்.
விலை: 180/--
எடுக்கவோ, கோர்க்கவோ.. சிறுகதைத் தொகுப்பின் நூலாசிரியர் குடந்தை பரிபூரணன்,
புலம் பெயர்ந்த மலையகப் படைப்பாளி ஆவார்.
கும்பகோணம் அருகேயுள்ள வடகரை கிராமத்தில் வசித்து வருகிறார்.
சிறுகதைகளுக்காகப் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவரது சகோதரர் மலையகத்தின் பிரபல எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் ஆவார்.
இத் தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
முதல் சிறுகதை ' தாளுண்ட நீர்' பொதிகைச்சாரல் மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையாகும்.
மருந்து என்ற சிறுகதை கணையாழி இதழில் வெளிவந்துள்ளது.
பேரழிவின் ஆரம்பம் என்ற கடைசிச் சிறுகதை வானதி மாத இதழில் பரிசு பெற்ற சிறுகதையாகும்.
இத் தொகுப்பில் வெளியாகியுள்ள சிறுகதைகள் அனைத்தும் மலையக மண்ணின் வாடையை பிரதிபலிக்கின்றன.
சிறுகதைகளின் கதாபாத்திரம், கதையமைப்பு இவையாவும் சிறுகதைகளுக்கான இலக்கண வரம்போடு இருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோன்று ' பல்லி விழுந்த பால் ' சிறுகதை தனக்கு பிடிக்காத திருமணத்தை கதையின் நாயகி நாசூக்காக தனது தந்திர குணத்தால் நிறுத்தி விடுவது, கதையை படிக்கும் போதே நமக்கு பிடித்து விடுகிறது.அதற்கு எழுத்தாளரின் எழுத்து நடையே காரணமாகும்.
ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் எதிர்பார்ப்புகளோடு நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இவரது எழுத்து நடையில் தமிழ் தவழ்கிறது.
அலுப்பு தட்டாமல் சிறுகதைகள் நம்மோடு கைகுலுக்குகின்றன.
மொத்தத்தில்
"எடுக்கவோ....
கோர்க்கவோ" சிறுகதைத் தொகுப்பு
வாசிக்கும் வாசகர்களை நிச்சயமாக நேசிக்க வைக்கும்.
புத்தகம் வேண்டுவோர், தொடர்புக்கு...
6384538289.
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.