சென்னை,போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு போனில் பேசிய மர்ம நபர் ஒருவர்,
“சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் MH -K2237
பதிவெண் உள்ள காரில் போதை பொருள்கடத்தப்படுவதாகவும், கார் தற்போது பூந்தமல்லியை கடந்து போய் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
உடனே அலுவலக தலைமை அதிகாரி ஈஸ்வர், பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அனைத்து செக் போஸ்ட்களுக்கும்
தகவல் தெரிவித்து அவ்வழியே
செல்லும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்யும்படி உத்தரவிட்டார் .
தர்மபுரி , கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைஅலுவலர்களையும் மாவட்டத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை வாகனங்களை தீவிர சோதனையில் ஈடுபடுத்துமாறகேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் வாகனங்களை தீவிர பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரி செக்போஸ்ட் அருகே “எம் எஸ் கே 2237” என்ற எண்ணிட்ட கார் ஒன்று வந்தது.
ரவிபிரகாஷ் என்ற அதிகாரியின் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குழு அந்த காரினை வழிமறித்து சோதனை செய்தது.
அந்தக் காரில் நான்கு இளைஞர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மும்பையில் இருந்து பெங்களூர் வழியாக தமிழ்நாடு, மற்றும் ஆந்திராவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பெங்களூர் வழியாக மும்பைக்கு செல்வதாக தெரிவித்தனர்.
அவர்களது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள், காரில் இருந்து அவர்களை இறங்கச் சொல்லி காரினை அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
ஆனால்,அக்காரில் இவர்கள் தேடி வந்த பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட காரில் சோதனை மேற்கொண்டும், எந்த போதை பொருளும் கிடைக்கவில்லை என்பதால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.
இதனிடையில் அந்த செக்போஸ்ட்டினை ஆம்புலன்ஸ் ஒன்று வெகுவேகமாக வந்து கடக்க முயன்றது.
அப்போது அதனை தடுத்து நிறுத்திய சோதனை சாவடி ஊழியர்கள் ஆம்புலன்சில் யாரோ ஒரு நபர் படுக்க வைக்கப்பட்டிருப்பதை கண்டவுடன் , வேனில் இருந்தவர்களிடம்
“எங்கே போகிறீர்கள் “?என கேட்டார்.
“இவருக்கு”நெஞ்சுவலி, அவசர சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றார் வேனில் இருந்த ஒருவர்.
உடனே அவர்களை அனுமதித்து மேலே போக சொன்னார்கள் சோதனை செய்த அதிகாரிகள்.
தூரத்திலிருந்து அந்த ஆம்புலன்ஸ் கடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரவி பிரகாஷ்,
அவசரமாக தன்னுடைய குழுவினரிடம் உடனடியாக அந்த ஆம்புலன்சை தொடர்ந்து செல்லுங்கள் எனக் கூறிவிட்டு ,
தன்னுடைய மோட்டர் பைக்கில் வெகு வேகமாக அந்த ஆம்புலன்சை துரத்த ஆரம்பித்தார் .
இதனிடையில்,ஜீப்பில் ஆம்புலன்ஸை தொடர்ந்த அதிகாரிகள் தர்மபுரி செக்போஸ்ட்க்கு போன் செய்து குறிப்பிட்ட ஆம்புலன்சை போகவிடாமல் தடுத்து நிறுத்துமாறு கேட்டுகொண்டார்கள் .
குறுக்கு வழியில் வேகமாக சென்ற ரவி பிரகாஷ், அவர்களுக்கு முன்பாகவே , தர்மபுரி செக்போஸ்ட்டை அடைந்து, அந்த ஆம்புலன்சை வழிமறித்தான்.
ஆம்புலன்ஸில் வந்தவர்கள்,
ரவிப்பிரகாஷ் காவல் படையுடன் சுற்றி வளைத்தவுடன் , ஆம்புலன்சி லிருந்து இறங்கி தப்பித்து ஓட பார்த்தார்கள் .
ஆனால் , பின்னாலயே வந்த போதை பொருள் தடுப்பு குழுவினரும் சேர்ந்து தப்பிக்க முயற்சி செய்த ஆம்புலன்ஸில் வந்த நான்கு நபர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர் .
ஆம்புலன்ஸை சோதனை செய்தபோது டிரைவர் இருக்கைக்கு கீழாகவும் , நோயாளிகளின்
படுக்கையிலும் ,சிறு.சிறு
பொட்டலங்களாக ஓபியம் எனும் போதை மருந்து சுமார் பத்து கோடி ரூபாய்
மதிப்பிலானது பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பிடிபட்டது .
விசாரணையில், மும்பையில் இயங்கும் போதை பொருள் விற்கும் கும்பலின் உத்தரவின்படி,
ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு கடத்தி செல்வதாகவும் ,
ஆம்புலன்சில் சென்றால் ,போலீஸ் தொந்தரவு இருக்காது என்பதால், ஆம்புலன்ஸ் போல ஓரு வேனை அவர்கள்தான் தயார் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கடத்திட்டு எதற்காக வேறு ஓரு கார் நம்பரை சொல்லி போன் செய்தீர்கள் ?என கேட்டபோது,
அந்த காரில் வந்தவர்கள் பல இடங்களில் எங்களுக்கு வழிவிடாமல் இடைஞ்சல் செய்து வந்தனர்.
அவர்களுக்கு தொல்லை அளிக்கவும் ,
நாங்கள் போலீஸ் கவனத்தை திசை திருப்பவும்,. அந்த காரில் கடத்தல் நடப்பதாக போன் செய்தோம் என கூறினார்கள் .
ரவிபிரகாஷ், சென்னையில் உள்ள தனது தலைமை அலுவலகத்திற்கு கடத்தல் கும்பல் பிடிபட்டது தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.
அப்போது அவரது உயர் அதிகாரி ஈஸ்வர் , ஆம்புலன்சில்தான் போதைப் பொருள் கடத்தப்படுகிறது என்பதை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் ? என கேட்டார்.
தான் முதலில் அந்த ஆம்புலன்சை சந்தேகப்படவில்லை என்றும் , ஆனால் , அந்த ஆம்புலன்ஸ் சோதனைச்சாவடியை தாண்டியவுடன் அதில் படுத்து இருந்த நபர் எழுந்து அமர்வதையும் , ஆம்புலன்சின் விளக்குகள் போடப்பட்டதையும் நான் தூரத்திலிருந்து கவனித்தேன்.
அதன் பிறகுதான் எனக்கு ஆம்புலன்சில்தான் போதை மருந்தை கடத்துகிறார்கள் என்று சந்தேகம் வந்தது . அதனால், ஆம்புலன்சை நான் எனது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததுடன் ,எனது குழுவில் உள்ள மற்றவரையும் ஆம்புலன்சை தொடர்ந்து வரும்படி அறிவுறுத்தினேன்.
என் எதிர்பார்ப்பு வீனாகவில்லை. , அவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்று கூறி முடித்தார் ரவிப்பிரகாஷ்.
ஒரு பெரிய போதை கும்பலை பிடித்ததற்கா ரவிபிரகாசிற்கும் அவரது குழுவினருக்கும் உயர் அதிகாரி ஈஸ்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-கோபாலன் நாகநாதன்
சென்னை 33.