என்றோ ஒருநாள் பிரியத்தான் போகிறோம்
அதுவரை என்ப்ரியத்திற்கு சொந்தகாரி நீ ஒருத்தியே
என் வாழ்வில் வசந்தம் என்பது
என்னவளுடன் கடைசிவரை வாழ்ந்த நாட்களே...
எல்லாம் இருந்தும் நிம்மதியில்லா
பணக்காரனைவிட
பணதிற்காக மட்டுமே ஓடிஉழைக்கும்
ஏழையைவிட
இறைவன் கொடுத்ததே போதுமேன
வாழும்
சிலரின் வாழ்க்கை என்றும்
வசந்தமே
எதுவுமே தெரியாத வயதில் ...மனதில்
எண்ணற்ற நினைவுகளை தந்த பள்ளி
எப்பொழுதும் என்னை மாணவனாக மாற்றும்
மன்னவனாக இருக்கும் இன்றைய காலத்திலும்.
-த.திவ்யா
சேலம்