அழகிய நிலவில்தான்
களங்கமும் உள்ளது..
அழகான கடலில்தான்
கரிக்கும் உப்பும் உள்ளது...
அழகான மயிலின் குரல் கூட கர்ண கடூரமாகத்தான் இருக்கும்...
அழகில் நூறு சதவீத அழகு என்று ஒன்றுமில்லை...
அழகை ஆராதிப்போம் அதிலுள்ள சிறு குறைகளை மறந்து....
-'தேன்ராஜா,
நெய்வேலி'