அலைபேசி இல்லாமல் அகிலமும் அசையவில்லை, சொடக்குபோடும் நேரம் சொா்க்கவாசல் தொிகிறது,
ஊன் உறக்கம் வேண்டாம் ,
உணவு கூட வேண்டாம் அவ்வளவில் அடிமைப்படுத்திய அலைபேசிக்கு ஏது ஓய்வு?
சாலையில் தனியாய் ஏதாவது பேசியபடி நடந்துபோனால் பைத்தியம் என்பாா்கள்
ஆனால் அலைபேசி பைத்தியங்களோ ஹெட் போனோடு அங்குமிங்கும் உலாவருகிறது இது விஞ்ஞான வளர்ச்சியின் விஸ்வருபமா விபரீதத்தின் விளைநிலமா? வினாவிற்காக விடையையும் கூகுளில்தான் தேடவேண்டும் பல குடும்பங்கள் வாழ்வதும் அலைபேசியாலே பலகுடும்பங்கள்அதே சுனாமி அலைையால் தாழ்ந்ததும் நிஜமோ? கேள்விக்கு பதில் தேடுங்கள்
விடைதொியா கேள்விக்கு விடைகிடைக்கும் நாளே விடுதலைநாள்
-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்