tamilnadu epaper

கவிதை

கவிதை

*வீடுகள்*

விளை நிலத்தில்

பயிர் செய்கிறார்கள்

வீடுகளை! 

 *குருவி*

தன்னையே

கொத்திக் கொள்கிறது  

கண்ணாடியில் 

சிட்டுக்குருவி!


 *வேதனை*

ஏன் இப்படி

தேய்கிறாய் நிலவே

உனக்குமா 

காதல் வேதனை?

 *பாசக் கொலை*  

பாசக் கொலை

செய்கிறான்

குழந்தையை கடித்த

கொசுவை! 

 *யாருக்கு?*

எப்போதும் வந்த 

கனவுகள் நின்றுவிட்டன,

வயதாகிப் போனது 

கனவுக்கா,

எனக்கா? 

 *நினைவு பறவை*

கூண்டுகள் இல்லாத

நினைவு பறவை 

உன்னையே சுற்றித் 

திரிகிறது...   

 *உலகம்*

உன் சுவடுகளின் 

வாசலில்

மனசை வைத்துப் போகிறேன்,

வார்த்தைகளற்ற 

உலகம்

அது ஒன்றுதான்!

 *வெளி*

உலகத்தை

உள்வாங்கியபடி 

வெளியே நிற்கிறது

ஜன்னல்! 

 *சிற்பம்*

கல்நெஞ்சில் 

செதுக்கியகாதல்சிற்பம் 

எப்போது கண் திறக்குமோ?



 வெ.தமிழழகன் ,எம்ஏபிஎட்

 சேலம்