இப்படியும் ஒரு இன்ப அதிர்ச்சியா நினைக்கவே இல்லை என்றாள் ராணி கூடியிருந்த கூட்டத்தின் நடுவே .... "
" />
" இப்படியும் ஒரு இன்ப அதிர்ச்சியா நினைக்கவே இல்லை என்றாள் ராணி கூடியிருந்த கூட்டத்தின் நடுவே .... " " லட்சுமியின் அண்ணி தான் ராணி அவளுக்கு பத்து வருஷமாக குழந்தை இல்லை. அந்த ஏக்க பெருமூச்சோடு தான் லட்சுமியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்காக வந்திருந்தாள் ....." " குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா துவங்கியது லட்சுமி அனைவரையும் வரவேற்று தன் அண்ணி ராணியை அழைத்து குழந்தையை தூக்கி பெயர் வைங்க என்றாள் மன நெகிழ்வோடு ...." " தயங்கி தயங்கி நின்று மெதுவாக லட்சுமி காதில் மட்டும் விழும்படியாக ராணி சொன்னாள் " மலடி கை குழந்தை மேல பட வேண்டாம் வயதான பெரியவங்க யாராவது கூட்டத்துல இருந்தா கூப்பிடு லட்சுமி என்றாள். " குழந்தை இல்லாத வலி எப்படி இருக்கும்ன்னு எனக்கும் தெரியும் , அதுக்கு தான் அண்ணி எனக்கு ஆண்டவன் கொடுத்தது டுவின்ஸ் கையை நீட்டுங்க...இதாங்க பிடிங்க , நானும் என் கணவரும் ஒரு மனதா எடுத்த முடிவு தான் இது. " உங்க குழந்தை தான் இது தைரியமா வந்து பெயர் வையுங்க, அடுத்து என் குழந்தைக்கும் பெயர் வையுங்க என்றார் லட்சுமி ...." " வார்த்தைகள் வராமல் ஆனந்தக் கண்ணீர் மேலிட குழந்தையை கையில் வாங்கி வாரி அனைத்து கொண்ட ராணி தாயாய் தெய்வமாய் தியாகத்தின் உருவமாய் லட்சுமியை பார்த்தாள் ...." " தாயாகவே மாறி இருந்த லடசுமி குழந்தையையும் ராணியையும் ஒரு சேர மகிழ்ச்சி பொங்க தட்டிக் கொடுத்தாள். -சீர்காழி. ஆர். சீதாராமன். Breaking News:
சர்ப்ரைஸ்