tamilnadu epaper

சென்ட் உற்பத்தியாகும் இடம்.

சென்ட் உற்பத்தியாகும் இடம்.


கன்னோஜ் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. இது தலைநகர் லக்னோவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் கங்கைக் கரையில் உள்ளது.


இந்தியாவில் தயாராகும் வாசனை திரவியங்களில் 30 சதவீதம் கன்னோஜில் தயாராகிறது. இங்கு 28 பெரிய வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் 500 சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன‌.


கன்னோஜ் நகரின் மக்கள் தொகையான 17 லட்சத்தில் 60 சதவீதம் வாசனை திரவிய தயாரிப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 1990களில் 700 வாசனை திரவியங்களை காய்ச்சி வடிகட்டும் தொழிற்சாலைகளிருந்தன. இப்போது சுமார் 150 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. 


சுத்தமான சந்தன மரத்திலிருந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் ஒரு சில மில்லி லிட்டர்கள் ரூ 15 ஆயிரம் விற்கப்படுகிறது. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் 

ரூ குலாப் என்ற வாசனை திரவியம் ஒரு ஸ்பூன் ரூ.20,000 ஆகும்.


கன்னோஜில் தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களில் பெரும்பகுதி பான் மசாலா மற்றும் புகையிலை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அழகு சாதன பொருட்கள் சோப்புகள் இனிப்புகள் மற்றும் சுத்தப்படுத்த பயன்படும் திரவங்களில் வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுகிறது.


கன்னோஜ் மிகப் பழமையான நகரம். இதன் நறுமண திரவிய புகழை முகலாய ராணிகளும் வியாபாரிகளும் உலகம் முழுவதும் பரப்பிவிட்டனர்.


பிரான்சில் உள்ள Grasse நகரம் வாசனை திரவியங்களுக்கு உலகப் புகழ் பெற்றது. இங்கு வாசனை திரவியங்களை தயாரிக்க 

ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே கன்னோஜில் வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவிட்டார்கள் ‌. இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்கள் மூலம் இங்கு வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படும் முறைகள் ஆயிரம் ஆண்டு பழமையானவை.


சுத்த ரோஜா இதழ்களால் உருவாக்கப்படும் ரோஜா எண்ணெய் 10 மில்லி லிட்டர் ரூ.7000-லிருந்து ரூ 15,000 வரை விற்கப்படுகிறது. இதே அளவு இரசாயன எண்ணெய் ரூ 500க்கு விற்கப்படுகிறது. 


இங்கு பெரிய குடுவைகளில் வாசனை திரவங்களை காச்சுவதற்கு விறகுகளையும் உலர்ந்த மாட்டுச் சாணத்தையுமே எரிப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். 


கச்சாப் பொருட்கள் விலை ஏறறம்

 இத்தொழிலை மிகவும் பாதித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் சந்தன மரங்கள் வெட்டுவதற்கு தடை உள்ளது. இதனால் சந்தன எண்ணெய் மூலம் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்வோர் தங்கள் தொழிலை கர்நாடகம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்ள நேர்ந்தது. 


இயற்கையான வாசனை திரவியங்கள் விலை அதிகமாக உள்ளதால் இவைகளின் தேவை குறைந்து கொண்டே வருகிறது. எனினும் கன்னோஜ் வாசனை திரவியங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 


-க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.

9942094042.