tamilnadu epaper

துணிச்சலே!

துணிச்சலே!


விதியையும் சதியையும்...

துணிச்சலே

நீ இருந்தால்தான்

எவரும் வீழ்த்த முடியும்!


சோதனையையும் சூழ்ச்சியையும்

துணிச்சலே

நீ இருந்தால்தான்

எவரும் வெல்ல முடியும்!


துரோகத்தையும் தோல்வியையும்

துணிச்சலே

நீ இருந்தால்தான்

எவரும் தாங்க முடியும்!


பாவத்தையும் பழியையும்

துணிச்சலே

நீ இருந்தால்தான்

எவரும் விரட்ட முடியும்!


தன்மானத்தையும் சுயமரியாதையும்

துணிச்சலே

நீ இருந்தால் தான்

எவரும் காக்க முடியும்!


தப்பினையும் தவறினையும்

துணிச்சலே

நீ இருந்தால் தான்

எவரும் சுட்டி காட்ட முடியும்!


அநீதியையும் அக்கிரமத்தையும்

துணிச்சலே

நீ இருந்தால் தான்

எவரும் தட்டிக் கேட்க முடியும்!


குற்றத்தையும் கொலையினையும்

துணிச்சலே

நீ இருந்தால் தான்

எவரும் தண்டிக்க முடியும்!


லஞ்சத்தையும் வஞ்சத்தையும்

துணிச்சலே

நீ இருந்தால் தான்

எவரும் தீர்க்க முடியும்!


எந்த போராளிக்கும்

துணிச்சலே துணையாய்

நீ இருந்தால் தான்

புதுவிடியல் காண முடியும்!



ஜெ.ம.புதுயுகம்

பண்ணந்தூர்