tamilnadu epaper

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும்


அதிகாலைப் பொழுதின்

குளிர்ந்த காற்றின்

சுவாசமாக நீ.........


உச்சிநேர வெயிலில்

மரத்தின் இலையில் 

ஓவியமாய் நீ.....


அந்தி நேர 

தென்றலில் ஒலிக்கும்

இசையாக நீ......


இரவு நிலவொளியில்

வண்ண ஓவியமாய்

உன்னோடு கைகள் 

கோர்த்து கவி 

பாட ஆசை கொண்ட

என் நிழலாய் நீ........

என் நிலவாய் நீ.........


கால மரத்தை வேகமாக

உலுக்க உதிரும் இலைகளோடு

நினைவின் நிழல்........


தொடரும் வாழ்வில்

நிஜங்களோடு வாழ்வோம்

நிழலாய் அல்ல ...

நிஜங்களின்றி நிழலில்லை.



-N PADMAVATHY 

Chennai - 80