திருமதி மல்லிகா கோபால்
புதுச்சேரி.
இந்த தலைப்பில் தொடர்ந்து பல பயணங்களில் தொகுப்பினை நான் எழுதி வந்தாலும் இந்த கோடையில் பயணம் மேற்கொள்ளும் பலருக்கு பலவிதமான டிப்ஸ் அதாவது உபயோகரமான தகவல்களை சொல்ல விரும்புகிறேன்.
1.கோடை விடுமுறையை ரசிக்கும்படியாக முதலில் மேற்கொள்ளுங்கள் .
2. நாம் பயணம் செய்ய தேவைகளுக்கான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக விமானப்பயணம் மேற்கொள்ளும் பொழுது எந்த பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது அதை மட்டும் கொண்டு செல்லுங்கள் ஏனெனில் அங்கு செக் பண்ணும் பொழுது பல பொருட்களை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்.
3.. எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கான குறிப்புகளையும் அதைப் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களையும்
அதன் சிறப்புகளையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
4. உள்நாடு, வெளிநாடு தங்கும் இடங்களில் அல்லது விடுதிகளில் பக்கெட் அல்லது வாளி குளிக்கும் இடத்தில் வைக்கும் பழக்கம் தற்காலங்களில் இல்லை. எனவே கையில் ஒரு பாட்டிலோ, மக்கோ(mug) எடுத்துச் செல்லுதல் நல்லது. ஏனெனில் பெரும்பான இடங்களில் ஷவர் டைப் பாத்ரூம் தான் உள்ளது.
5. அந்தந்த இடங்களின் சிறப்பான பொருட்களை வாங்கும் பொழுது அதனுடைய விவரங்களை தெரிந்து கொண்டு வாங்குதல் நல்லது. ஏனெனில் அத்தகைய பொருட்கள் இப்பொழுது அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கிறது. அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு உடைகளைத் தேர்வு செய்து எடுத்துச் சென்றால் நல்லது. பல இடங்களில் வழிப்பறி கைப்பறி நடக்கும் . அதைக் கவனம் கொள்ளுதல் அவசியம்.
6. பல இடங்களில் புகைப் படங்கள் எடுக்கும் பொழுது அந்த இடத்தினுடைய ஆபத்தான இடமாக இருப்பின் தவிர்த்தல் நல்லது . மேலும் பல புகைப்படம் எடுத்து தருகிறேன் என்று பணம் பறிப்பதும் அல்லது கைபேசியை கவர்ந்து செல்வதும் பல இடங்களில் நடைபெறுகிறது. இது குறித்து கவனம் அவசியம். ஒரு வழிகாட்டி நம்முடன் இருத்தல் நலம் அப்படி இல்லாவிட்டால் ,அதைப் பற்றிய தகவல்கள் தங்கள் கையில் இருத்தல் அவசியம். எந்த இடத்தில் இருந்து நீங்கள் கிளம்புகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்களும் தங்கள் கைவசம் இருத்தல் வேண்டும் மேலும் பாஸ்போர்ட், விசா போன்ற ரெக்கார்ட்ஸ் எப்போதும் கைப்பையில் இருத்தல் நலம் பயக்கும்.
7. பல இடங்களில் சோப்பு, டவல் தந்தாலும் நாம் எடுத்துச் செல்லுதல் நல்லது . நாம் அவர்கள் தரும் டவலில் ஏதாவது கறை ஏற்பட்டால் அவர்கள் அதற்கான தொகையை வசூல் செய்கிறார்கள்.
8. நம் உடம்புக்கு ஏற்ற உணவுகளை உண்ணுதல் நலம் .அதை விட்டுவிட்டு அந்த உணவை சுவைக்கிறேன் என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை சீர்குலைத்தல் நல்லதல்ல.
9. அந்தந்த ஊரின், நாட்டின் கட்டுப்பாடுகளைக் கவனம் கொள்ளுதல் அவசியம்.
10. இறுதியில் ஒவ்வொரு பயணத்திலும் தங்கும் இடத்திலிருந்து கிளம்பும்பொழுது அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டோமா என்று ஒன்று இரண்டு முறை செக் செய்துவிட்டு கிளம்புதல் நலம் பயக்கும்.
அனைவரும் இந்த கோடையை அற்புதமாக பயணம் மேற்கொண்டு அனுபவங்களையும் இனிமையான நினைவுகளையும் பெறுவதற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல்களை பிரசுரிக்க உதவிய தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி