tamilnadu epaper

பலசுவை பகுதி

பலசுவை பகுதி


டெல்டா மாவட்ட

கிராமங்களில்

புழகத்தில் இருக்கும்

நல்ல அர்த்தமுள்ள தமிழ்(செலவாடை) பழமொழிகள்  


1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.


9. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். 

      மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.

10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.




11. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


12. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

13. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.





14. வாங்குகிற கை அலுக்காது 


15. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது. 16.ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். 

ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.



17.உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


ராஜகோபாலன்.J

சென்னை 18