tamilnadu epaper

பல் சுவை களஞ்சியம்

பல் சுவை களஞ்சியம்

காந்திஜி ஒருமுறை சபர்மதி ஆற்றின் கரையில் தங்கியிருந்த சமயம் ஒரு நாள் காலை தான் குளிப்பதற்காக ஆற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு அங்கிருந்த ஒருவரிடம் சொன்னார். அவரும் அவ்வாறு கொண்டு வந்து கொடுத்தவுடன் காந்திஜி அந்த ஒரு வாளி தண்ணீரில் குளித்து முடித்தாராம். அந்த நபர், "ஐயா, ஆற்றில் தான் நிறைய தண்ணீர் போகிறதே, இன்னொரு வாளி தண்ணீர் கொண்டு வருகிறேன், தாராளமாக குளியுங்களேன்" என்றாராம். அதற்கு காந்திஜி, "ஆற்று தண்ணீர் என் ஒருவனுக்கு மட்டும் சொந்தமல்ல. இந்த ஆற்றின் இரு மருங்கிலும் என்னை போல் நிறைய மக்கள் வாழ்கிறார்கள், அவர்களுக்கும் வேண்டுமல்லவா" என்றாராம். தன் தலைமுறை மட்டுமல்லாது தன் ஏழு தலைமுறைகளுக்கும் சொத்து சேர்க்கத் துடிக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எப்போது இதை உணர்வார்கள்?


-டீ. என. பாலகிருஷ்ணன் 

மடிப்பாக்கம் சென்னை600091