tamilnadu epaper

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 

வட்டம் ஓட்டப்பிடாரம் அருகில்

உள்ளது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமதுரை 

பிறந்து வளர்ந்த இடமாகும் இந்த

கோட்டை 35  ஏக்கர் பரப்பு கொண்டது

500 அடி நீளமும் 300 அடி அகலம்

கொண்ட மண் கோட்டை ஆகும்

கீழ் பகுதி அகலமாகவும் மேலே செல்ல

செல்ல சரிவாகவும் கட்டப்பட்டு உள்ளது

இது கம்பு வரகு உமி சுண்ணாம்பு

மண் இவற்றை கொண்டு கட்ட பட்டது

எளிதில் உடைக்க முடியாது 

கோட்டையின் நான்கு புறமும்

கொத்தலங்கள் அமைக்க பட்டு 

உள்ளது.  பின்னர் நடை பெற்ற

போரில் பிரிட்டிஷ் காரர்கள் மூலம்

இடிக்க பட்டது பின்னர் 1974 ஆம்

ஆண்டு தமிழக அரசால் இது

புதுப்பிக்க பட்டது. இது சுற்றுலா

துறை பராமரிப்பில் உள்ளது

இடிக்க பட்ட எஞ்சிய பகுதிகள்

தொல்லியல் துறை கட்டுபாட்டில் 

உள்ளது இதன் உள்ளே கட்டபொம்மன்

நினைவு மண்டபம் கோட்டை

அழகிய வண்ண ஓவியங்கள் தேவி

ஜக்கம்மா கோயில் உள்ளது

இந்த கோட்டையில் பிரிட்டிஷ்

காரர்களின் கல்லறையும் உள்ளது

தினசரி மாலை 6 மணி வரை

பார்வை இட அனுமதி உண்டு

ஞாயிறு மட்டும் காலை 8 மணி

முதல் 1 மணி வரை திறந்திருக்கும் 

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15

மே இரண்டாவது வாரத்தில்

கட்டபொம்மன் நினைவை போற்றும்

வகையில் திருவிழாவும் மாட்டு

பந்தயமும் நடைபெறுகிறது

கட்டபொம்மன் தூக்கில் இட பட்ட

இடம் கயத்தாரில் உள்ளது இங்கு

சிலையும் நினைவு மண்டபமும்

உள்ளது. பாஞ்சாலங்குறிச்சியிள 

வீர விளையாட்களுக்கு பஞ்சமில்லை

இன்றும் கட்டபொம்மன் வாரிசுகள்

தலை முறை தலைமுறையாக

வாழ்ந்து வருகின்றனர்


நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி