tamilnadu epaper

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்று இருப்பது இரண்டாவது இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம் 

*- மு.வரதராஜனார்.*


எறும்பின் சுறுசுறுப்பும், எருதின் உழைப்பும், நரியின் தந்திரமும், நாயின் விசுவாசமும், கழுதையின் பொறுமையும், காகத்தின் கூட்டுறவும், புலியின் வீரமும், புறாவின் ஒழுக்கமும், சிங்கத்தின் நடையும், யானையின் அறிவும், மானின் வாழ்வும், மக்களுக்குத் தேவை 

*- கி.ஆ.பெ. விசுவநாதன்*


இரகசியத்தைக் காப்பாற்றுங்கள், அது உங்களுக்கு அடிமை. அதை வெளியிட்டுவிட்டால் அது உங்கள் எஜமான் 


*- வில்ஹென்றி*


காலில் செருப்பு போட்டுக் கொண்டால் நீ முள்ளின் மீது கூட சுலமாக நடக்கலாம். ஞானமாகிய செருப்பை போட்டுக் கொண்டால் உலகம் என்னும் முள் நிறைந்த வனமெங்கும் நீ பயமின்றி பயணம் செய்யலாம் 


*- இராமகிருஷ்ண பரமஹம்சர்*


கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு முரணானது அல்ல, சுதந்திரத்தை நியாயமான வகையில் பயன்படுத்திக் கொள்ள உதவுவதே 


*அரவிந்தர்*


-ஆர். ஹரிகோபி,

புது டெல்லி