மழைக்காலம் ஆரம்பித்தாலே ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக கூந்தலும், சருமமும் அதிகம் பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழப்பது, தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இது போன்றவை ஏற்படாமல் இருக்க ரசாயனம் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தலாம்.தலைக்கு குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை முடியின் வேர்க்கால்கள், முடியின் நுனி போன்ற பகுதிகளில் நன்கு மசாஜ் செய்த பின் குளிப்பது நல்லது.மழைக்காலம் என்பதால் தலைமுடி சீக்கிரம் காயாது. ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். ஆகையால் முடியை நன்றாக உலர்த்திய பின் வெளியில் செல்வது நல்லது.முடியை பராமரிக்க கற்றாழை மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையேனும் கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு செய்வதால் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு குறையும். மேலும் முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக தலைமுடியை பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.மழைக்காலத்தில் பிளாஸ்டிக் சீப்பை விட மரத்தாலான சீப்புகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
உங்கள் முகத்தை இயற்கையான முறையில் அழகாக்க சில Tips!!
அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள், அதிக எண்ணெய் தன்மைகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும்.பப்பாளி பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவுடனும், பளபளப்பு தன்மையுடனும் இருக்கும்.முகம் பளபளப்பாக மாற புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் அழகாக மாறும்.அன்றாடம் சீரகத் தண்ணீர் அருந்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைவதோடு, மீண்டும் பருக்கள் வராமலும் தடுக்கும்.பன்னீரோடு சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு தழும்புகள் மறையும்.இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.தக்காளி, வெள்ளரிக்காய் இந்த இரண்டையும் அரைத்து, அதோடு முல்தானி மிட்டி கலந்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.குளிர்ந்த நீர் மற்றும் பால் சேர்த்து அதை ஒரு துணியில் தொட்டு, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.
அடர்த்தியாக கண் புருவம் வளர வேண்டுமா? இதோ டிப்ஸ்!
மனிதர்கள் முகபாவங்களைக் காட்டுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் புருவங்கள் உதவிகரமாக உள்ளது. மேலும் தூசு, வியர்வை போன்ற பொருட்கள் கண்குழிகளுக்குள் எளிதில் விழாமல் தடுக்க புருவங்கள் உதவுகின்றன.அப்படிப்பட்ட புருவம் ஒரு சிலருக்கு மிக மெல்லியதாக காணப்படும். அடர்த்தியாக்கி கொள்ள பல்வேறு சிகிச்சைகளை அவர்களும் மேற்கொள்வார்கள். இயற்கையான பொருட்களை கொண்டே புருவத்தினை அடர்த்தியாக்கி கொள்ளலாம்.விளக்கெண்ணெயை கண் புருவத்தில் தினமும் இரவு வைத்துக் கொண்டால் புருவம் அடர்த்தியாக வளரும்.பெரிய வெங்காயத்தை நறுக்கி அதை நன்கு அரைத்து, அந்த சாற்றை கண் புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.பல்வேறு சத்துக்கள் நிறைந்த கற்றாழையை கண் புருவத்தில் தடவி வந்தால் அடர்த்தியான புருவத்தை விரைவில் பெறலாம்.சரும வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவும் என்பதால், கண் புருவத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் அடர்த்தியாக வளரும்.முட்டையின் மஞ்சள் கரு அல்லது ஆலிவ் ஆயிலை கண் புருவத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கண் புருவம் அடர்த்தியாக வளரும்.மேலும் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை கண் புருவத்தில் தடவி வந்தாலும் அடர்த்தியாக வளரும்.
உங்களுக்கு கை,கால் மூட்டுகள் கருமையாக உள்ளதா? இதை ட்ரை பண்ணுங்க..!
பொதுவாக சிலருக்கு முழங்கை, கணுக்கால், விரல் மூட்டு, கால் மூட்டு உள்ளிட்ட வெளிப்புற பகுதிகளில் கருமையாக இருக்கும். இந்த கருமையை இயற்கையாகவே போக்கி கொள்ள வழி உண்டு.டிப்ஸ் 1:எலுமிச்சை பழத்தை கருமையாக உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து ஊறவைத்து விட்டு, அதன்பிறகு கழுவினால் கருமை மறைய வாய்ப்புள்ளது.டிப்ஸ் 2:எலுமிச்சை சாறு, பாலாடை, வெள்ளரி சாறு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கருமை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நீங்கும்.டிப்ஸ் 3:தயிர், வினிகர் ஆகியவற்றை சேர்த்து கருமை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.டிப்ஸ் 4:கடலை மாவு, மஞ்சள் தூள், பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கருமை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.டிப்ஸ் 5:பெரிய வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் நன்கு அரைத்து கருமை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.டிப்ஸ் 6:தேங்காய் எண்ணெயுடன் ஆவாரம்பூ சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை கருமை உள்ள இடத்தில் பூசி வரலாம்.டிப்ஸ் 7:வெள்ளரிக்காய் சாறு, வினிகர், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கருமை உள்ள இடங்களில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.
முதலுதவியின் முக்கியத்துவம் என்ன? அறிந்து கொள்வோமா!
முதலுதவி என்பது ஒருவருக்கு திடீரென ஏற்படும் காயங்கள், நோய்கள் போன்றவற்றை உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் முன்னர் நம்மை சுற்றியுள்ள வசதிகளை கொண்டு செய்யப்படும் ஒரு அவசர உடனடி உதவி ஆகும்.முதலுதவியை மருத்துவரோ அல்லது மருத்துவர் அல்லாதவரோ செய்யலாம். ஆனால் முதலுதவி செய்பவர் நோய் அல்லது காயங்களுக்கு ஏற்ப உதவி செய்பவராகவும், பதற்றம் அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.முதலுதவி சிகிச்சை முறைகள் ஒவ்வொரு சூழ்நிலைக்கும், நிலைமைக்கும் ஏற்றவாறு இருக்கும்.முதலுதவியின் சில முக்கிய நோக்கங்கள்:முதலுதவியின் முதல் நோக்கம் உயிரை காப்பாற்றுவது.ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், விபத்து போன்றவற்றால் அவர்கள் உடல் மேலும் மோசமடையாமல் பாதுகாப்பது.ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், விபத்து போன்றவற்றில் இருந்து அவர்கள் விரைவில் குணமாக நடவடிக்கை எடுத்தல் போன்றவையாகும்.பொதுவாக முதலுதவி செய்பவர் முதலில் தனது பாதுகாப்பை உறுதி செய்து, நோயாளிகளை காப்பற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும்.
கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்..!
ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் செய்யுங்கள். இது உங்கள் உடலில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவும்.சூழ்நிலையிலிருந்து சிறிது நேரம் விலகி செல்லுங்கள்.உங்கள் கோபத்திற்கு காரணம் என்ன என்பதை சிந்தியுங்கள்.உங்கள் கோபத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்துங்கள்.நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.கோபத்தை கட்டுப்படுத்த டிப்ஸ்உங்கள் கோபத்தை தூண்டும் காரணிகளை அறிந்து கொள்ள வேண்டும்.உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்து கொள்ளுங்கள்.யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.மதுபானம் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்க்கவும்.மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.உங்களின் கோபத்தை வெளிப்படுத்த ஒரு நாட்குறிப்பை பயன்படுத்தவும்.உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.உங்களுடைய கோபத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.கோபத்தை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயல், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. பொறுமை மற்றும் பயிற்சியின் மூலம், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளலாம்.
மன அமைதியை பெற சில வழிகள்..!
யோகா மற்றும் தியானம் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.தினமும் 15-30 நிமிடங்கள் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும்.பல்வேறு சுவாச பயிற்சிகள் உள்ளன, உங்களுக்கு எது சிறந்தது என்பதை கண்டறிந்து தினமும் செய்யுங்கள்.இயற்கையில் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.நேர்மறையாக சிந்திப்பது மன அமைதியை பெற உதவும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.நல்ல உறவுகளை வளர்த்தல் மன அமைதியை பெற உதவும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.போதுமான தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.ஆரோக்கியமான உணவு மன அமைதியை பெற உதவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.
கோபத்தால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதா?
கோபம் கண்டிப்பாக மன ஆரோக்கியத்தை பாதிக்கும். கோபம் என்பது ஒரு இயற்கையான உணர்ச்சி, ஆனால் அது அதிகமாக இருந்தால் அல்லது ஆரோக்கியமற்ற வழியில் வெளிப்படுத்தப்பட்டால், அது மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.பாதிப்புகள்:அதிகப்படியான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை மற்றும் பிற மன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.உறவுகளுக்குள் அன்பு முறிவு ஏற்படும். அதாவது கோபமாக இருக்கும்போது எளிதில் கோபம் அதிகமாகி சண்டை போடலாம். இது நம்மை நேசிப்பவர்களின் அன்பை சேதப்படுத்தலாம்.கோபம் இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, தோல் நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.கோபத்தை ஆரோக்கியமான வழியில் எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதை கற்றுக்கொள்வது முக்கியமாகும்.கோபத்தை வெளிப்படுத்த உதவும் சில குறிப்புகள்:உங்கள் கோபத்தின் ஆதாரத்தை அடையாளம் காணவும். நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது, அதை ஆரோக்கியமான வழியில் வெளிப்படுத்த உதவும்.உங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டறியவும்.உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது, உங்கள் சொற்கள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள்.நீங்கள் மற்றவர்களைக் காயப்படுத்தாமல், உங்கள் கோபத்தை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
நீரின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு!
உயிரின்றி உடல் கிடையாது என்பது போல் நீரின்றி இவ்வுலகமே கிடையாது. மரம், மனிதன், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களும் நீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் கடினமாகும்.பல்வேறு நீர் ஆதாரங்களாக கடல், ஏரி, மழை, கிணறு, ஓடை, ஆழ்துளை கிணறு, குளம் போன்றவைகள் எல்லாம் உள்ளன. ஆனால் அவற்றில் நீர் உள்ளதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. எனவே நீரின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிவது மிகவும் முக்கியமாகும்.பயன்பாடுகள்:மனிதர்கள் மற்றும் விலங்குகள் குடிப்பதற்கும், சமையல் மற்றும் உணவு தயாரிப்பதற்கும் நீர் அவசியமாகும்.விவசாயம் நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் அவசியமாகும். விவசாயத்திற்கு துணைபுரியம் கால்நடைகள் உயிர்வாழ நீர் இன்றியமையாததாகும்.மின்சாரம் உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்யவும், சுத்தம் செய்யவும் நீர் பயன்படுகிறது.கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் சரக்குகளை கொண்டு செல்ல நீர் அவசியமாகும்.நீச்சல், மீன்பிடித்தல், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பயன்படுகிறது.சுற்றுச்சூழல் இயற்கையாகவும், இயற்கையான சுவாசத்தை சுவாசிக்கவும் நீர் பயன்படுகிறது.மருத்துவதுறை முதல் ஆராய்ச்சிதுறை வரை பல இடங்களில் நீர் முக்கியமான ஒன்றாக உள்ளது.இவ்வாறு நீர் பல வகைகளில் முக்கியமான ஒன்றாக பயன்படுகிறது.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வழிகள்:குளிக்கும் நேரத்தை குறைத்தல், ஷவர் பயன்படுத்துவதற்கு பதிலாக பக்கெட் பயன்படுத்துதல்.பல் துலக்கும்போது மற்றும் முகம் கழுவும்போது குழாயை அடைத்து விடுதல்.பாத்திரங்களை கழுவும்போது குழாயை திறந்து விடாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கழுவுதல்.காய்கறிகளை கழுவும்போது ஓடும் தண்ணீரை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கழுவுதல்.குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.வீட்டில் உள்ள குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாக சரிசெய்தல்.கார்களை கழுவும்போது குழாயை திறந்து விடாமல், ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி கழுவுதல்.மழைநீரை சேமித்து பயன்படுத்துதல்.நீர் என்பது இயற்கையின் அரிய வளம். அதை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவோம். நீரின் அவசியம் பற்றி விழிப்புணர்வுடன் இருப்போம்.
சுத்தமான காற்றை சுவாசிக்க.. காற்று மாசுபாட்டை தடுப்போம்..!
காற்று நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் அவசியம். காற்று நமக்கு சுவாசிக்க, ஆரோக்கியமாக வாழ ஆக்ஸிஜனை வழங்குகிறது.இன்றைய காலகட்டத்தில் சுவாசிக்க, ஆரோக்கியமாக வாழ, சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க தூய்மையான காற்று அவசியம்.இப்பொழுது அனைத்து இடங்களிலும் பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு எதனால் ஏற்படுகிறது, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என பார்க்கலாம் வாங்க..நாம் தினமும் பயன்படுத்தும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளது.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.காட்டுத்தீ, விவசாய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை எரிப்பதனால் காற்று மாசுபாடு ஏற்படும்.காற்று மாசுபாடு சுவாச நோய்கள், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.காற்று மாசுபாடு அமில மழை, பசுமை இல்ல வாயு உமிழ்வு, பல்லுயிர் இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.காற்று மாசுபாட்டை குறைக்க பின்பற்ற வேண்டியவை:காற்று மாசுபாட்டை குறைக்க நம்முடைய அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்களை பயன்படுத்தலாம்.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தூசியை கட்டுப்படுத்துவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்கலாம்.மரங்கள் காற்றை சுத்திகரித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. காற்று மாசுபாட்டை குறைக்க நீங்கள் மரங்களை வளர்க்கலாம். இதன் மூலம் காற்று மாசுபாடு நீங்கி உங்கள் வாழ்வில் ஆரோக்கியமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம்.
-Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai
7358228278