மாலைக்காட்சிக்கு முதல் வகுப்பில் இரண்டு டிக்கட்டுகள் முன்பதிவு செய்த திருப்தியுடன் வீடு திரும்பினான் சந்தோஷ். புதிதாக மணமாகியிருந்த அவனுக்கு தன் மனைவியுடன் தனியாக நேரம் செலவு செய்ய மிகவும் ஆர்வமாயிருந்தது. “மாலதி, மாலதி, இங்கே வாயேன், இன்னிக்கு நீயும் நானும் சினிமாவுக்கு போறோம் சீக்கிரம் ரெடியாயிடு” என்றான். ‘நான் வரலைங்க” என்றாள் மாலதி.
அவனுக்கு மனதில் குழப்பம்.”ஏன் வரமாட்டேங்கறே” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.” ஆமா” சினிமா ஒரு ரெண்டு மணி நேரம், போறதுக்கும் வர்றதுக்கும் ஒரு ரெண்டு மணி நேரம்; வந்த உடனே டயர்டாயிடும்; உடனே தூங்க போயிடணும்; அவ்வளவு நேரம் வீட்டுல நான் இல்லன்னா முடியாது” என்று சொன்னாள். அவன் டிக்கட் முன் பதிவை ரத்து செய்து திரும்பினான். மனதிற்குள் யோசித்தான். தன்னை அவள் அழகோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டான்; அவளுக்கு அவன் பொருத்தமற்றமவனாக தந்னை தானே கற்பனை செய்து முடிவெடுத்துக்கொண்டான்.
அவனுடைய அப்பா ஒரு வங்கி அதிகாரி; அம்ம ஒரு கல்லூரி பேராசிரியை; அவர்கள் இளசுகளின் மனம் அறிந்தவர்கள்; எந்றுமே மாலதியை எதற்கும் கட்டுப்படுத்தாதவர்கள். மாலதியின் மறுப்பிற்க்கு அவர்கள் காரணம் இல்லை. இந்த சினிமா என்று மட்டுமல்ல; முக்கால் வாசி நேரம் அவனோடு வெளியில் வருவதேயில்லை. அவன் வீட்டில் அவனது தாத்தா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இருக்கிறார்; இந்த வீடே அவருடையது தான். அவருக்கு தேவையான உணவு, மற்றவைகளை அவனது பெற்றோஎ அக்கறையுடன் கவனித்து வருகின்றனர். அவருக்கு ஒரு தனியறையும் உண்டு. அவர் தன் நேரம் முழுவதையும் அறையிலே கழித்தாலும் ஆரோக்யமானவராகவே இருந்தார். எனவே அவரும் தடங்கல் ஏதும் சொல்லியுருக்கமுடியாது; இறுதியில் அவனுக்கு அவள் வேண்டுமென்றே தன்னை உதாசீனம் செய்வதாக பட்டு விட்டது.குழம்பிய மனோ நிலையுடன் அடுத்த நாள் ஆபிசுக்கு கிளம்பினான். அவன் கிளம்பும்வரை கூட இருந்து கவனித்தாள் மாலதி. வண்டியில் கிளம்பி தெரு முனைக்கு வரும்போதுதான் சந்தோஷுக்கு மொபைல் போனை சார்ஜரில் போட்டதால் எடுக்காமல் வந்துவிட்டது புரிந்தது. மீண்டும் விட்டுக்கும் வந்தப்போது கூடத்தில் மாலதி இல்லை; உள்ளே அவன் தாத்தாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிகொண்டு இருந்தாள். ‘ ஏம்மா மாலதி, உன் புருஷன் எவ்வள்வு ஆசையா உன்னை சினிமாவிர்கு கூப்பிட்டான் நீ ஏன் போகல; அவன் மனசு அவ்வளவு வருத்தப்பட்டிருக்கும் அதை நீ ஏன் புரிஞ்சுக்கல? என்று கேட்டார். அதற்கு மாலதி சொன்னாள் “ இந்த வீட்டுல உங்களுக்குப் பிள்ளை, மருமகள், பேரன்னு இத்தனை பேர் இருந்தும், ஒருவரலாயும் உங்கக் கூட கொஞ்ச நேரம் பேசவோ, சாப்பிடற நேரம் கூட இருந்து பரிமாற முடியாத சுழ்னிலையில இருக்காங்க; நானு இப்படி எதுக்காவது வெளியே போய் நேரத்தி செலவழிச்சா நீங்க மறுபடியும் ஒரு யந்திரமாகவே வாழத் தொடங்கிடுவீங்க; நான் வந்ததுல இருந்து நீங்க, மாலதி, மாலதின்னு கூப்பிட்டு உங்களோட அந்தக்கால அனுபவங்கங்களையும் வாழ்க்கை சூழலையும் என்னோட பகிர்ந்து கொண்டதுல இருந்து ரொம்பவும் கலகலப்பா ஆகிட்டு வர்ரீங்க; இந்த மாற்றம் உங்களுக்கு அதிக சுறுசுறுப்பையும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கு’ என் கணவர் படிச்சவர்; பண்புள்ளவர்; நான் செய்யறது அவருக்கு சரியா பட்டதுனால தான் என்னை கோவிச்சுக்கலே” நான் ரொம்ப கொடுத்து வெச்சவ” என்றாள்.
தன்னறையில் நுழைந்து செல்லை எடுத்துக்கொண்டவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மாலதி. “ ஆமாம் மாலு” நான் சரியாகவே புரிஞ்சுண்டேன்; இனிமே தாத்தாவுக்கு ரெண்டு பார்ட்னர்கள், சாயந்தரத்துல பொழுது போகறதுக்கும், பேசறதுக்கும்” என்று சொல்லிவிட்டு, உற்சாகத்துடன் வண்டியை கிளப்பினான் சந்தோஷ்! “ அவளின் நல்ல குணத்தை முழுமையாக உணர்ந்துகொண்டதால்.
-ரேணுகா சுந்தரம்