அன்புடையீர்,
வணக்கம் 19.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் வெயிலின் அளவு 4 இடங்களில் சதம் அடித்தது என்ற செய்தியை கேட்டதும் வெப்பமாக உணர்ந்தேன். இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையாக நல்ல நாளாக எனக்கு உதவியது. நாளை பன்முகம் என்ற அழகான பத்திரிக்கை வர இருப்பதையும் அதை படிக்கும் ஆவலுடனும் காத்திருக்கிறேன்
இன்றைய திருக்குறள் மிகவும் அருமை நல்ல பொருளுடன் இருந்ததால் ஆர்வமாக படிக்க தோன்றியது? ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா என்ற செய்தியை படித்தது சின்ன குழந்தைகளுக்கு கூட பிரிவு உபசாரமா என்று அதிசயத்துடன் படித்தேன். ஸ்ரீ பார்த்த சாதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் என்ற படம் கண்ணை கவர்ந்தது.
முடக்கத்தான் கீரையின் அருமை பெருமைகளை படித்திருக்கிறேன். ஆனால் அதில் மருத்துவ குணங்களும் உள்ளது என்ற நல்ல தகவலை தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து தெரிந்து கொண்டேன். திருவொற்றியூரில் மீனவர்கள் சாலை மறியல் என்ற செய்தி சென்னையில் நடக்கும் சம்பவத்தை கண் முன்னே கொண்டு வந்து காட்டியது.
ஆளுநர் ஆர்.என் .ரவி அவர்களின் திடீர் பயணம் பற்றிய அரசியல் செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது இறந்ததாக ஒரு ராணுவ வீரரை அறிவித்தபின் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உயிரோடு வந்தார் என்ற செய்தியை ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும் படித்தேன்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வரும் அனைத்து தலைவர்களின் தகவல்களும் அருமை என்று பி கல்யாணசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்தியும் மிக நல்ல தகவல்.
பல் சுவை களஞ்சியம் பகுதியில் வந்த சரும பிரச்சனைகளை குணமாக்கும் ஆலிவ் ஆயில் என்ற செய்தி இந்த கோடைகாலத்தில் நல்ல அருமையான தகவல். மீம்ஸ் ரசித்து சிரிக்க வைத்தது ஜோக்ஸ் அதைவிட சூப்பரோ சூப்பர்.
வாழ்வு தரும் ஆரோக்கியம் மிக அருமையான தகவல்களை அழகாக பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகள். தினசரி உடற்பயிற்சி செய்வது எவ்வளவு அவசியம் என்பதையும் சருமத்துளைகள் வராமல் தவிர்ப்பது எப்படி என்றும் நல்ல விழிப்புணர்வு செய்திகளாக சொன்னது பாராட்டுக்குரியது.
தமிழ்நாடு இ பேப்பரில் 16ம் பக்கம் என்றாலே பரவசமாக இருக்கும். அதில் வரும் அனைத்து கடவுள்களின் படங்களும் கோவில் செய்திகளும் நெஞ்சத்தை அள்ளும் வகையில் அமைந்திருப்பது தான் உண்மை.
சுற்றுலா தகவல்கள் மிகவும் அருமை சென்னைக்கு அருகே உள்ள அழகிய தீவுகள் குட்டி அந்தமான் என்று மிக அருமையான தகவலை சொல்லி நான் பார்க்காத இடத்தை நீ பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டிய செய்தி.
தங்கத்தின் விலை ஒரு கிராம் 9 ஆயிரத்து நெருங்கியது என்று செய்தி அதிர்ச்சியாக இருந்தது. பொன் நகைகளை வேண்டாம் நம் வதனத்திற்கு புன்னகையே போதும் என்று தீர்மானிக்க வைத்த தகவல்.
மணிப்பூர் தடவியல் அறிக்கை விரைவில் தாக்கல் என்ற செய்தியும் ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் என்ற விளக்கமும் வட இந்தியாவில் நடக்கும் அனைத்து செய்திகளும் மிக அழகாக சொன்னது.
கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் என்று நடுவானில் சுட்டுக் கொலை என்று அதிர்ச்சியான தகவலை படித்ததும் வெளிநாடு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றியது. வர்த்தக போர் தீவிரமடைந்தால் உலக வணிகம்1.5 சதவீதம் வரை வீழும் என்ற செய்தி உலகத்தில் உள்ள வர்த்தகத்தை அழகாக படம் பிடித்து காட்டியது.
அனைத்து செய்திகளும் அருமையான இன்றைய நாட்டு நடப்பினையும் உலக நடப்பினையும் படம் பிடித்து காட்டுவதால் மிகவும் ஆர்வமுடன் படிக்க தோன்றுகிறது. இதற்காக அரும்பாடு படும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
நன்றி
-உஷா முத்துராமன்