அன்புடையீர்,
வணக்கம். தமிழ்நாடு இ பேப்பர். காம் 25.4.25 அன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் வந்த அரசியல் செய்திகளை படித்தவுடன் நம்ம இந்திய அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான வெள்ளிக்கிழமையை எனக்கு படம் பிடித்து காட்டியது.
எத்தனை முறை படித்தாலும் அலுக்காத திருக்குறளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறளும் பொருளும் உற்சாகமுடன் படிக்க வைக்கிறது .யானை வாகனத்தில் ஸ்ரீ நம் பெருமாள் சித்திரை வீதியில் வலம் வந்த காட்சி மிகவும் அருமை கண் கொள்ளாக் காட்சியாக பார்த்து மகிழ்ந்தேன்.
எரியுலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பா என்பதனை ஆய்வு செய்வதற்காக ஹைதராபாத் செல்வதை பற்றி படித்து தெரிந்து கொண்டேன். கும்பகோணத்தில் கலைஞர் பெரியார் பல்கலைக்கழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்று நோயாக மாறலாம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னது பாராட்டுக்குரியது.
பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை என்று எல்லையில் போர் பதற்றம் பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருந்தது. வார முடி விடுமுறை பற்றி தெரியாது என்று நீதிபதி கேள்விக்கு போலீஸ்காரர் சொன்ன பதில் அதிசயமாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரம் நுகர்வோருக்கு தெரிவிக்க உத்தரவு மிகவும் நல்ல செய்தி.
இன்றைய தலைவர்கள் பகுதியில் . சிங்காரவேலர் பற்றிய வரலாறு மிகவும் அற்புதம். புதுமையான தலைவர்களை பற்றி தினம் தினம் அறிந்து கொள்ளும் நல்ல ஒரு வாய்ப்பினை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பகுதி அலுக்கவே அலுகாமல் ஆர்வமுடன் படிக்க வைக்கும் மீம்ஸீம் விடுகதையும் ஜோக்ஸும் அதனுடைய தனி வெளிப்பாடு.
தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் என்ற பக்கத்தில் வந்த மூன்று தத்துவங்கள் நான்கு வரிகள் மிகவும் அற்புதமான தகவல். அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது என்று மிக எளிமையாக அட்சய திருதியை கொண்டாட உதவியதற்கு மிகவும் நன்றி .
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக 12 மாகாணங்கள் வழக்கு என்ற செய்தி அமெரிக்காவை கண் முன்னே கொண்டு வந்து காட்டியது. திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை மலை அடிவாரத்தில் தீவிர சோதனை என்று திருப்பதியில் நடக்கும் செய்தியை மிக அழகாக சொன்னது மகிழ்ச்சியாக படிக்க வைத்தது.
பேருந்துகளில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் கேமராக்கள் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு பற்றி படித்ததும் இது நல்ல பயனுள்ள தகவல். காஷ்மீரை விட்டு 6 மணி நேரத்தில் 3337 பேர் விமானம் மூலம் வெளியேறிய செய்தி காஷ்மீரில் நடக்கும் அத்தனை தகவல்களையும் கண் முன்னே காட்டியது.
விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை கிரிக்கெட் பற்றிய செய்தி மிகவும் நல்ல தகவலாக ஆர்வமுடன் விளையாட்டு செய்தியை படிக்க வைத்தது.
.சமரசம் பேசுவோம் ஆனால் சரணடைய மாட்டோம் என்ற உக்கிரன் திட்டவட்டமாக சொன்ன செய்தி அதிர்ச்சியாக இருந்தது. போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி என்று படத்துடன் பார்த்தவுடன் நானும் அவருக்கு என்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தினேன்.
அழகான செய்திகளை அச்சேற்றி எங்களை ஒரு புளாங்கித நிலைக்கு செல்ல வைக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் தலையாயப் பணியை தலை வணங்குகிறேன். உங்களுடைய பணி இதுபோல் என்றென்றும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி
உஷா முத்துராமன்