. கரோனா வைரஸ் காய்ச்சல் பரவல். பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தல். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிந்து செல்லவேண்டும். நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 மாதங்களில் 200 சிறார்கள் மீட்பு . வறுமையால் வேலை தேடி வருதல், பெற்றோர்களிடம் கோபம், ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம், பருவக்காதல் இப்படி பல காரணங்கள் என செய்தி மூலம் தெரிய வருகிறது. பெற்றோர்களும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை . இவை அடிக்கடி நடைபெறுகின்றன. காவலர்களின் மன அழுத்தத்தை அறிந்து தீர்வு காண வேண்டும். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க 6 பழங்களை சாப்பிடுங்க .... கூறும் அமெரிக்க மருத்துவர் . அவை கிவி, பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, ப்ருன்ஸ்/கொடி முந்திரி மற்றும் பெர்ரி பழங்கள். மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம். பல்சுவை களஞ்சியத்தில் அரசு பள்ளி ஆசிரியரின் குறல்........ மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள். சமையல் அறை ஸ்பெஷல் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை. சுற்றுலா: சென்னை பக்கத்துல இருக்கிற ஹில் ஸ்டேஷன்னுக்கு போங்க.......! ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியாதவர்களுக்கு அருமையான இடங்கள். சென்னைவாசிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மும்பை, கர்நாடகாவிலும் மலை. ஊட்டி, கொடைக்கானலிலும் மழை. சுற்றுலா செல்பவர்கள் தற்போது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எஸ்.அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்