நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்திவ் வுலகு- என்பது குறள் நேற்று வரை நம்முடன்
பயணித்த திரு. ந. சண்முகம் மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சி. அன்னார் ஆன்ம சாந்தி அடையட்டும்.
திருச்சியில் கட்டப்படும் நூலகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப் படும் என்ற முதல்வரின் அறிவிப்பு பாராட்டத் தக்கது.
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு அதிகமான வரி வசூலிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறைவு என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டதை
மறந்து விட்டீர்களே. அதன்படி பார்த்தால் கடந்த ஆண்டை விட இன்னும் அதிகம் அல்லவா வசூல் ஆகியிருக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் வன்புணர்வு செய்திகள் வரும்போது பிரபல பட இயக்குநர் சனோஜ் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி மோனலிசா என்ற 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச் சாட்டில் கைதாகி இருப்பதை என்ன சொல்ல?
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு
கிடைத்திருப்பது தமிழகத்துக்கு பெருமை
இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா புவியைப் பார்த்த அனுபவம் படிக்க மகிழ்வாக இருக்கிறது.
சூடானில் குழந்தைகளுக் கெதிரான வன்முறைகள்
படிக்க மனம் பதறுகிறது.
தரமற்ற கட்டுமானத்தால் தாய்லாந்தில் 32 மாடி கட்டிடம் இடிந்து உயிர்ச் சேதத்துக்கு வழி வகுத்திருக்கிறது. பிரபல சீன நிறுவனத்தின் ஒப்பந்தங்களைப் பலநாடுகள் இரத்து செய்திருக்கின்றன.
கைப்பொருள் இழந்து நாட்டு விடுதலைக்கு உழைத்த தியாகி டி என் தீர்த்தகிரி முதலியாரை என்றும் மறக்க முடியாது.
பெண்கள் பெயருக்கு சொத்து பத்திரம் பதிவு செய்தால் 1% வரி குறைப்பு அமலுக்கு வந்து விட்டது.பெருமைக்குரியது.
-சிவ .சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி