நெல்லை குரலோன் சிங்கப்பூர் பயணம் பதட்டம் மிகுந்ததாகவும் பார்த்த இடங்கள் பற்றியும் இருக்கிறது.
நானும் என் பையனுடன் 2011 வாக் கில் மலேசியா லங்காவி சிங்கப்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தேன். முஸ்தபா சந்தை பிரபலமானது தான். ஒன்றும் அசம்பாவிதம் ஆகவில்லை.
லங்காவி தீவு. குகைப் பயணம் படகில் சென்று கழுகுகளுக்கு கையில் உணவு கொடுத்தது
மலேசியாவில் படாவி முருகன் கோவில் மிகச் சிறப்பானது. மிகப்பெரிய நேர்த்தியான முருகன் சிலை கண்ணைக்கவரும்
சிஙகப்பூரில் தான்
லிட்டில் இந்தியா மாரியம்மன் கோவில் சீனா டவுன் புத்தர்விகார்
டால்பின் காட்சி தாவரவியல் பூங்கா பறவைகளை வைத்து ஒருகாட்சி ஒளி ஒலியில் தேவதை நடனம் ரெட்சென்டர் என
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தூய்மைன்னா அவ்வளவு தூய்மை மெட்ரோ ரயில்
நிலையங்கள். படத்தோடு பயணக் கட்டுரை எழுத எண்ணி படங்களைத் தேடுகிறேன். அழிந்து போனதா . தெரியவில்லலை.
2014 ல் அமெரிக்கா விற்கு மகன் வீடு சென்று சுற்றிப் பார்தத்தையும் எழுத எண்ணுகிறேன். தள்ளிப் போயக் கொண்டே இருக்கிறது.
திருவைகுண்டத்தில்
பத்துப் பதினைந்து ஆண்டுகளாகக் குடியிருந்திருக்கிறேன்.
திரு. பொ. திருகூட சுந்தரர் பற்றிக் கேள்விப்படவே யில்லை
இன்றைய கட்டுரை அறிய வைத்தது.
குமரகுருபரர் பிறந்த இடம் என்பது மட்டுமே தெரியும்.
வலிவரும் போதெல்லாம் வலிமிகுந்து விழிநனைப்பாள்- பெண் உண்மையை உரக்கச் சொல்கிறார் நறுக் நொறுக்சுல .
ரிஷிவந்தியா நொறுக்கிட்டார்.
காஷ்மீரில் 28 உயிர்கள் பலியான சம்பவத்தை உலகம் முழவதுமே கண்டித்திருப்பது மனம்
நெகிழச் செய்கிறது.
நல்ல கட்டுரைகளும் கதைகளுமாய் அலங்கரிக்கிறது.
வாழ்க தமிழ்நாடு இ பேப்பர்
சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி