மனிதனை மனிதன் கொல்லும்
கொடுமை தீராதா..
மதத்தின் பெயரால் நிதம் யுத்தம்
மாறும் நிலை வாராதா..
இந்து முஸ்லீம் வெறியாட்டம்
என்றுமே மாறாதா..
அமைதிமிகு உலகத்தை
அழிக்கும் புத்தி போகாதா..
மொழி இனம் மதமென
மோதும் போர் ஓயாதா..
ராமன் அல்லா ஏசு
கற்றுத்தந்தது இதுவா..
கண்மூடித்தனமாய் ஆடும்
வெறியாட்டம் மாயாதா..
தீவிரவாதம் முடிவா
தேன்கூட்டில் கல்லா..
மன்னியாதே ஏசுவே
அவர்களை சிலுவையில் அறையும்..
நபிகள் நாயகமே கருணையின்றி
அவர்களை கழுவிலேற்றும்..
வாலியின் திண்மார்பிளந்த
ராமபானமே
அவர்களின் வன்மார்பறும்..
தீவரவாதமென தீப்பற்றும் நெஞ்சை
அன்பாற்றில் கொட்டி ஆறவிடும்..
நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி
இந்த வஞ்சனை மாந்தரை
நினைத்துவிட்டால்..
மீண்டும் நீ பிறந்து வந்து
கொடியவர்மேல் கூற்றெனப்பாய்
வேரோடு சாய்..
எல்லையும் போரும் எதற்கு
இன்பமாய் வாழ பழக்கு..
எவனோ ஒருவனின் வில்லினின்றும்
எத்தனை கொல்லம்புகள்..
இறைவா நீ வா
ஏசுவாய் கண்ணனாய் அல்லவாய்
எல்லா ரூபம்கொண்டு
இப்போதே வா
இந்தப்பொல்லா மனிதரை
புதையூட்ட வா..
அன்பால் அணை
உலகை உன்பால் நிறை..!
-ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்