கட்டில் இருந்தும் மெத்தை இருந்தும்
இயற்கை காற்றைதேகம் சுவாசிக்க விரும்பியது,
முற்றத்தில் படுக்க
இயற்கை மின்விசிறி வீசாது போனது,,
இருக்கின்ற கொசுக்கள் பாசத்தில் கடித்து தொல்லைசெய்தது,
சிந்திக்கத் தோன்றியது
தெருமுனைகளில் படுத்து உறங்குபவர்களின் நிலைமை
காட்டில் ஆடு அடைகின்ற கூரைகூடை வீடாக்கி
மின்சாரம் இல்லாது
மண்ணெண்ணெய் விளக்கை ஒளியாக்கி
மண்புழுதியை முற்றமாக்கி இரவைக் கழிக்கின்ற ஆட்டிடையர்களையும்,
இருக்க வீடு அற்ற சொந்த நிலமற்ற
நாடோடிகளை
நடுரோட்டின் பக்கவாட்டில் படுத்துறங்கும் சில மனிதர்களைஎண்ண
நெஞ்சத்தில் ஓர் சலனத்தை ஏற்படுத்தியது,,
தெருக்களையே வீடாகக் கொண்டவர்களுக்காக
இயற்கை மின்விசிறியே வீசுவதை நிறுத்தி விடாதே,,,
கொசுக்கள் அவர்கள் தேகத்தோடு பேசிக் கொண்டிருக்கும், பொழுது,,
அவர் விழிகள் மூடாது,,
இயற்கை மின்விசிறியே பகலில் கூட நீ வீச மறுத்தாலும் இரவில் வீச மறுத்து விடாதே
எண்ணற்றவர்கள் உறக்கமிழந்து இரவை கழிக்க நேரிடும்,,
இயற்கையே உன்னை பழிக்க நேரிடும்,
- கவிதை மாணிக்கம்