புத்தக தினம் இன்று,
புதிதாக ஒரு புத்தகம்
படிக்கத்தான் விரும்பினேன்; நான்.
கடையில் போய் வாங்க வர
எண்ணம் கொண்டு
புத்தக அடுக்கை நோக்க;
பிரிக்காத புத்தகக் கட்டுகள்..பல.
புரட்டாத புது புத்தகங்கள்... பல.
புதினங்கள்,
சிறுகதைகள்,
குறுங் கதைகள்,
கட்டுரைத் தொகுப்புகள்,
கவிதைகள்,
போதகங்கள்,
புராணங்கள்,
பாட புத்தகங்கள்,
என் மனதை ஏதோ நெருட,
என் காலைக் கட்டிப்போட;
என் கைகள்
அவற்றில் ஒன்றை எடுக்க;
இது வரைக்கும் நான் படிக்காத,
இதிகாச காவியம்:
ஜெயமோகனின்,
' வெண்முரசு'
படிக்கத் துவங்கி விட்டேன்;
அங்கெங்கும் நகராமல்
-சசிகலா விஸ்வநாதன்