tamilnadu epaper

குடை

குடை


அதர்மம் அதிகரித்தால்

உலகில் மறுபடி

அவரிப்பதாய் வாக்குரைத்த

கண்ணா

நீ உறங்கிவிட்டாயா..


விழித்துப்பார்

கனவினை கலைத்துப்பார்..


இங்கே தர்மம் மண்மூடி

அதர்மம் வேரோடி

ஆலகால விசமாய்

அகிலமெங்கும் பரவி..

மனித சமுதாயே

மண்ணோடு மண்ணாய் புதைவதை நீ அறிவாயா..


தீவிரவாதம் பிரசவிக்கும்

மதவாத மாக்களால்

உலகம் நிர்மூலம் ஆவதை

உணர்வாயா..


முள்கீரீடம் சூடி

ஆணி அறைந்து

உன்னையும் இவர்கள்

சிலுவையேற்றிவிடுவார்கள்..


ஆகவே..


மறவாமல் கொண்டு வா

போரெனும் குடை..!


-ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்