பஞ்சபூதம்
தீயும் நிலமும்
காற்றும் நீரும்
ஆகாயமும் தான்
பஞ்ச பூதமாகும்
நெருப்பு
உலகில் நெருப்பு
இல்லை யேல்
உலகமே இல்லை
வாழவே நெருப்பு
நிலம்
உன் உயிரினத்தை
காப்பது நிலம்
வாழும் இடம்
வழங்கும் நிலம்
காற்று
உலக உயிரினத்தின்
காற்றே உயிர்
அடிப்படை காற்றே
வாழ்வு காற்றே
நீர்
நீரே உடலுக்கு
அடிப்படை அளகு
நீரின்றி உயிர்
உலகில் இல்லை
ஆகாயம்
உலகத்தை இணைக்கும்
ஆகாய விரிவு
அனைத்தும் காக்கும்
ஆகாயம் அடிப்படை
மற்றவை
ஒன்றுடன் ஒன்று
இணைக்கும் பிணைப்பு
உயர்வும் தாழ்வும்
இதில் இல்லை
அளவோடு இருப்பின்
வளமான வாழ்வு
மாறினால் தீராத
தொல்லை தொல்லை
-பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
சேலம்