23-04-2025 விமர்சனம்
தலைப்பு செய்தியே படிப்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. சுற்றுலா பயணிகள் மீதான பயங்கர தாக்குதலில் 28 பேர் பலி இதில் வெளிநாட்டினரும் அடங்குவர். பஹல்காம் ஜம்மு காஷ்மீரின் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த செவ்வாய் கிழமை துப்பாக்கி சூடு நடத்தினர். எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த பொழுது இப்படி ஒரு தீவிரவாதம் நினைத்து பார்க்கவே கொலை நடுங்குகிறது. பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் பெரிய தலைவலி. இதில் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஒரு விருந்தினர் வேறு. நல்லவேளை அவர் காஷ்மீர் செல்லவில்லை. இந்தியாவின் பெயர் என்ன ஆயிருக்கும்? இவர்கள் யார் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இவர்களுக்கு என்ன தான் வேண்டும்?
அடுத்து யுபிஎஸ்சி தேர்தல் முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்தியாவில் 23வது இடமும் பெற்று இருக்கிறார். இவர் தமிழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர்.நல்ல விஷயம்.
சவுதி அரேபியா பட்டத்தரசர் முகமது பில் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் அவசரமாக நாடு திரும்புகிறார். காஷ்மீரில் நடந்த தாக்குதல் காரணமாக அவர் திரும்பும் போது அவர் கூறி இருப்பது இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிக்கவே முடியாது என்று. 2019ல் நடந்த தாக்குதல் நமக்கு நினைவில் இருக்கலாம் அதற்குப் பிறகு நடந்த பெரிய தாக்குதல் இது என்கிறது செய்தி.
சிந்திக்க ஒரு நொடி நன்றாக இருக்கிறது. கோவில் திருவிழாக்கள் பகுதி படமும் விவரமும் அருமை.
25ஆம் தேதி அதிமுக செயலர் கூட்டம் என்று எடப்பாடி அறிவித்திருக்கிறார். தேர்தல் களம் சூடு கண்டிருக்கும் இந்த சமயத்தில் இது நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். அதையும் தவிர அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் குண்டுகட்டாக கைது. இதன் பின்னணி என்னவெனில் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் அதோடு பல்வேறு கோரிக்கைகளையும் வைத்துள்ளார்கள். உழைப்பாளர் சிலையருகே நடந்த இந்த கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கீதா ஜீவன் அவர்கள் இது முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறியிருக்கிறார்.
சரியா போச்சு சாதாரணமாக அலுவலகங்களில் தான் கழிப்பறையில் பெயர் எழுதும் வழக்கம் உண்டு. கோவை மாநகராட்சி 95வது வார்டில் இதுபோல் நடந்துள்ளது. எழுதப்பட்டிருந்தது என்னவெனில் தியாகி சுக்கன் ஜி அறிஞர் அண்ணா நினைவுக் கழிப்பிட கட்டிடம் என எழுதப்பட்டிருந்தாம். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருக்காதா பின்னே?
வாருங்கள் சுவாரஸ்யமான செய்திகளை பார்ப்போம்.
திருச்செந்தூரில் கோஷ்டி மோதல் ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு. விளங்கிடும். பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை. விபத்து ஒன்றில் காலை எழுந்த முதியவர் ஒருவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொழுது அங்கு மின்சார பராமரிப்பு இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வீடியோ வைரல் ஆவதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களின் ஊதியம் போல் வழங்க வேண்டும் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது உயர் நீதிமன்றம். ஆமாம் இதில் நிரந்தரம் என்ன தொகுப்பூதியம் என்ன இருவருமே உயிர் காக்கும் வேலை தானே செய்கிறார்கள். நல்ல விஷயம் தான்.
கதைகள், கவிதைகள் அருமை.ஏப்ரல் 23 புத்தக தினம் குறிப்பு அருமை. தினம் ஒரு தலைவர்கள் அற்புதம். நூல் விமர்சனத்தில் கலியுகன் கோபி அவர்களின் இரண்டு நூல்கள் பற்றி விமர்சனம் அருமை.
பல்சுவை களஞ்சியத்தில் கொஞ்சம் யோசியுங்கள் பெற்றோர்களே நன்றாக இருந்தது.
குழந்தைகளின் கை வண்ணம் பகுதி அருமை.
காவிரியில் இருந்து 25 டி எம் சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவு. அடடா. பரவாயில்லையே.
தவறான தகவல்களை பட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்ற செய்தி ஏன் வந்தது என்றால் ராகுல் அவர்களின் வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுமியை கடத்தியவருக்கும் அவருக்கு கர்ணாடகா எஸ்டேட்டில் தங்க வீடு கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவருக்கும் 20 ஆண்டுகள் போக்சோ தண்டணையில் கைது. இது நடந்தது புதுச்சேரியில். சரியான தீர்ப்பு.
குழந்தை பிறப்பை அதிகரிக்க அமெரிக்காவில் ஊக்கத்தொகை. அமெரிக்கா பரிசீலனை.
க்ரைம் கார்னரில் 5000 லஞ்சம் கையும் களவுமாக சிக்கினார் வீ ஏ ஓ.
ஐயாயிரம் கோடி எல்லாம் ஊழல் நடக்கும். 5000த்த புடிச்சிட்டேன்னு பெருமை. பாவம் மனுஷனுக்கு நேரம் சரியில்லை போல.
சரியா போச்சு நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த குற்றவாளி. டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் இது நடந்திருக்கிறது. ஆறு வருட கடுங் காவல் தண்டனை அளித்ததற்கு நீ எப்படி உயிருடன் வெளியில் வருகிறாய் என்று பார்க்கிறேன் குற்றவாளி மிரட்டல் விடுத்திருக்கிறான். ஜனநாயகம் இது தான். சபையில் பேச மறுப்பு அளிக்கப்பட்டதால் இது ஜனநாயகப்படு கொலை என்றார் எடப்பாடி.
வெளிநாட்டு செய்திகளில் கனடாவில் இந்து கோவிலில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கல். அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என்பதை தடுத்தது மகாராஷ்டிரா. டெல்லியில் இடையில் பள்ளி நிற்றலுக்கு தீர்வு மாணவர்கள் வீட்டுக்கு சென்ற போலீசார். அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பம். சீனா பகிரங்க எச்சரிக்கை.
சரியா போச்சு ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள். ரூபாய் 61545 கோடி முறைகேடு. கவர்மெண்ட் ஒன்னு யோசிச்சா இவங்க வேற மாதிரி யோசிச்சு அதுலயும் ஏமாத்துறாங்க. வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு. அவங்க தடுக்கல புகுந்தா இவங்க கோலத்துல பூருவாங்க. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ஒரு திட்டம் போ ட றப்ப அதனுடைய நுணுக்கங்களை கவர்மெண்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு ஜி எஸ் டி ஒரு உதாரணம். இதுவரை 3207 கோடி மீட்டிருக்கிறார்கள் 216 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னொன்று என்னவென்றால் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
-ஜெயந்தி சுந்தரம்