இந்திய விவசாய பொருட்களுக்கு
அமெரிக்கா 100% வரி விதித்துள்ளது
வரி விதிப்பதில் மோடிக்கு ட்ரம்ப்
சளைத்தவர் இல்லை என்பதை
நிரூபித்து விட்டார். கும்பகோணம்
வெற்றிலைக்கு புவிசார் குறியீடு
வழங்கியிருப்பது காலம் தாழ்ந்த
நடவடிக்கை. தமிழக கேரள வனப்பகுதியில் ரயில் மோதி
கடந்த 27 மாதங்களாக எந்த
யானையும் உயிர் இழக்கவில்லை
என வனத்துறை கூறியிருக்கிறது
அதன் வழிதடத்தில் ரயில் பாதை
அமைத்து இருப்பது தவறு
வெளிநாடு போன்று வனப்பகுதியில்
உயர்மட்ட பாலம் அமைத்திருந்தால்
வனவிலங்குகளுக்கு எந்த சேதாரமும்
ஏற்படாது. எங்கள் எழுத்தாளர்
குழுமத்தின் மூத்த உறுப்பினரும்
தூணாக விளங்கிய திருவண்ணாமலை சண்முகம்
அவர்கள் மறைவை படத்துடன்
வெளியிட்டு அஞ்சலி செலுத்திய
இ பேப்பருக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள். நம்பிக்கை கட்டுரை
நல்ல படிப்பினை. நடிகை அதுல்யா
ரவியின் ஹோம்லி லுக் படத்திற்கு
உங்களுக்கு இந்த கவர்ச்சியான
படம் தான் கிடைத்ததா வேறு படம்
கிடைக்கவில்லையா. வேலூர்
முத்து ஆனந்த் சாரின் காதல் கவிதை
அற்புதமான படைப்பு. சின்னஞ்சிறு
கோபுவின் கீரை விற்கும் பெண்
கவிதை வல்லாரைக் கீரையை
ஞாபகப்படுத்தியது. சுயநலமாக
இருக்காதே என்ற சுமதி முருகன்
கட்டுரை எதார்த்தமாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள 40
சுங்கச்சாவடிகள் கட்டணம் 10%
உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை
சுங்கச்சாவடிகள் அமைத்ததற்கான கட்டணங்கள்
முன்னதாகவே முடிந்து விட்டது
மீண்டும் மீண்டும் வசூலிப்பது
பகல் கொள்ளை தான்.
பத்திரப்பதிவில் பெண்களுக்கு
ஒரு சதவீத கட்டண குறிப்பு
கண்துடைப்பு நாடகமாகும்
தற்போது பத்து லட்சத்திற்கு
குறைந்து எந்த சொத்தும் வாங்க
முடியாது. அப்படி இருக்கையில்
அதற்கு உச்சவரம்பு நிர்ணயம்
செய்வது கண் துடைப்பு தான்
எனவே உச்சவரம்பை நீக்க வேண்டும்
விண்வெளியில் இருந்து சுனிதா
வில்லியம்ஸ். இந்தியாவைப்
பார்த்தபோது இமயமலை தொடரும்
பாம்பே டு குஜராத் சாலையும்
தென்பட்டதாக கூறி இருக்கிறார்
அவருக்கு இந்தியாவின் தென்பகுதி
தெரியவில்லை போலும்.
தாய்லாந்தில் சீனக் கட்டுமான
நிறுவனங்கள். கட்டிய அனைத்து
கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளது
எனவே பல வெளிநாடுகள் சீன
கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கிய
டெண்டர்களை ரத்து செய்து இருப்பது
குறிப்பிடத்தக்கது.
-நடேஷ். கன்னா
கல்லிடைகுறிச்சி