tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-06.05.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-06.05.25


தினசரி ரசிக்கும்படியான கவிதைகள் 


கட்டுரைகள் ஆன்மீக குறிப்புகள் 


வெளியிடுவதில் தமிழ்நாடு 


இ பேப்பரை வெற்றி கொள்ள 


 முடியாது நாளுக்கு நாள் உங்கள் 


ரேட்டிங் கூடிக் கொண்டு செல்வது 


மகிழ்ச்சி அளிக்கிறது. மே ஐந்தில் 


வணிகர் நாளாக கொண்டாடப்படும் 


என முதல்வர் அறிவித்து 


இருப்பது வணிகர்கள் நலனுக்கு 


மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் 


சென்னையில் நகை வியாபாரியை 


கட்டிப்போட்டு அவரிடமிருந்து 23 கோடி 


மதிப்புள்ள வைரங்கள் கடத்தல். 



மூளையை பாதிக்கும் 


 பழக்கவழக்கங்கள் பற்றிய கட்டுரை 


அருமையாக இருந்தது. நீட் தேர்வுக்கு 


இவ்வளவு ஆடைக்கெடு பிடி


 வேண்டாமே பங்குனி உத்திரம் 


அன்று நிறைய தெய்வத் 


 திருமணங்கள் நடைபெற்றது. 


தேன் ராஜா அவர்களின் சுத்தம் 


சோறு போடும் கவிதை அற்புதம். 


ராகுல் இந்து இல்லை என வட மாநில 


சாமியார் கூறி இருப்பதோடு 


அல்லாமல் ராகுலை இனி எந்த 


இந்து கோவிலிலும் அனுமதிக்க 


கூட வேண்டாம் என்று கூறியிருப்பது 


மூடநம்பிக்கையின் உச்சம். 


லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து 


தன்னை விடுவிக்க டிரம்ப் உதவியை 


அதானி நாட இருக்கிறார் 


கூடவே மோடியை கூட்டிச் செல்லவும் 


மோடியின் உருவ பொம்மையை 


கூண்டில் ஏற்றி கனடாவில் 


காலிஸ்தான் தீவிரவாதிகள் 


வெறியாட்டம். அமெரிக்காவில் 


வெளியிடப்படும் வெளிநாட்டு 


 திரைப்படங்களுக்கும் 100% 


வரி அளிக்கப்படும் என ட்ரம்ப் 


உத்தரவு. இனி அங்குள்ள மக்கள் 


உள்நாட்டு திரைப்படங்களை 


மட்டுமே பார்க்க முடியும்.



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி