tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-24.04.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-24.04.25


தமிழ் நாடு இ பேப்பரின் அதிவேக வளர்ச்சி ஆனந்தம் பிளஸ் அளப்பரிய உத்வேகம் அளிக்கிறது.

உலகளவில் பரபரப்பை உண்டு பண்ணி யிருக்கும் பஹல்காம் தாக்குதலால் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகள்...

முதன்மை தலைப்புச் செய்தியில் பட விளக்கத்துடன் பளிச் பளிச்...

'பட்ட காலிலே படும்'

என்பதை நிருபிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு

மீண்டும் சிக்கல். உச்ச

நீதிமன்றம் கேள்வியில் கிடுக்குப்பிடி...

செந்தில் தாக்குப் பிடிப்பாரா? கோர்ட் கடவுள் கையில் தான் 

விடை இருக்கிறது.

சங்கடம் மட்டுமல்ல சஸ்பென்ஸும் தொடர்கிறது.


பொருத்தமான திருக்குறள் பதிவு.

பரவசமும் ஆச்சர்யமும் போட்டி போட்டு பொங்குகிறது.

உலக புத்தகத் தினச் செய்திகள் மினி ஊர்வலமாய் அணி வகுத்து அழகூட்டி ஆறறிவுக்கு ஆராதனை செய்கின்றன. பலே பலே சார்!

பொன்னகரத்தில் புவி தினம் --2025 விளக்கமுடன் செய்தி.

விழிப்புணர்வுக்கு கலங்கள் விளக்கம்.

பெஹல்காம் தாக்குதல் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம்.

தேச இறையாண்மைக்கு 

தோள் கொடுப்போம்!

இன்று பெஹல் ' harm'

நாளை நிச்சயம்:

பெஹல் 'Calm'

நல்லதையே நினைப்போம்...

நல்லதே நடக்கும்!

நம்பிக்கை தானே வாழ்க்கை!

நலம் தரும் மருத்துவத்தில் இளம் வயது உடல் நலப் பிரச்னை களுக்கான தீர்வுகள்... தெளிவாகவும் விரிவாகவும் சொல்லப் பட்டிருந்தது மிகவும் சிறப்பு. பயனுள்ள கட்டுரைக்கு தனித்த பாராட்டு!

'அரசியல் in' பகுதியில் வெளியாகி இருந்த பிஹார் முதல்வர் பதவிக்கு குறி சிராக் கட்டுரை செம கிளாஸ்...

செம விறுவிறுப்பு!

கங்கிராட்ஸ் சார்!


மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னர் தொடுத்த கேள்விக்கு மஹா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தக்க பதிலடி கொடுத்து சமன் செய்துள்ளார்.

சிறப்பான செய்திப் பதிவு.

இந்தியாவின் எல்லா இடத்திலும் அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் அலறுவது வேடிக்கை விநோத அரசியல் அரங்கேற்றம்.

வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும். இது வெறும் வேதம் மட்டுமல்ல விஞ்ஞானமும் தான்!

கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலர்களுக்கு திருமா அறிவுறுத்தல்.

இனி வரும் காலங்களில் வெற்றி என்பது எளிதாக எட்டிப் பறிக்கும் கனி அல்ல என்பதை சரியாகப் புரிந்து கொண்டு , கட்சிக் காரர்களை உசுப்பேற்றும் உஷார் தலைவர்! வாழ்க வளமுடன் 

விதிகளின் படியே வக்ப் மசோதா நிறைவேற்றப் பட்டது.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் திட்ட வட்ட அறிவிப்பு.

பஹல்காம் பரபரப்பில் வக்ப் மசோதா மங்கிப் போய் விட்டதே...

எல்லாம் இரு கோடு தத்தவந்தான்! பாலச்சந்தருக்கு ராயல் சல்யூட்!


பிரபாகர் சுப்பையா எழுதிய அப்பாவுக்காக சிறுகதை நெஞ்சம் தொட்டது.நெகிழ்வை

தந்தது.சூப்பர்...சூப்பர்!

நெல்லை குரலோனின் சிங்கப்பூர் பயணக் கட்டுரை சுவாரஸ்யம் குன்றாமல் இருந்தது சிறப்பு.சபாஷ்! 

(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே)

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த பொ.திரிகூட சுந்தரம் வரலாறு, வரலாறு அல்ல பொக்கிஷம். வெறும் புகழ்ச்சி இல்லை இது!

உங்களின் ஆதரவு இன்றி வென்றெடுக்க முடியாது. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித்தின் அறிக்கை அக்மார்க் ஆனந்த ரகம்! அசத்தலோ அசத்தல்!

கவிதைகள் அனைத்தும் வெறும் வரிகளாக இல்லாமல் 

வீரிய விதைகளாக மிளிர்கின்றன.

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

தமிழ் நாடு இ பேப்பரின் தங்கத் தரப் பகுதியாக வாசகர் கடிதங்கள் வெற்றிப் பேரணியாக வீறு நடை 

போட்டு, வெளிச்சம் பாய்ச்சி வருவது, வாசக நல் உள்ளங்களுக்கு மறுக்க முடியாத --

மறக்க முடியாத 

வரப்பிரசாதம்.

தொடர்ந்து ஜொலிக்கட்டும் தமிழ் நாடு இ பேப்பரின் 

தன்னிகரில்லா தனித்துவப் பணி!



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர் 

தென்காசி மாவட்டம்