தமிழ்நாடு இ பேப்பரின் அபார வளர்ச்சி ஆச்சரியம் பிளஸ் அற்புதம் பிளஸ் சமுதாய ஆரோக்கியம்.
இந்த குறுகிய காலத்தில் 28 லட்சத்துக்கும் அதிகமான வாசக சொந்தங்களை பெற்றிருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே? இலவசத்தை சாக்காக வைத்து...
ஜான் ஏறினால் முழம் இறங்கும் கதையாக இல்லாமல்... விளம்பரங்களை அள்ளி விட்டு பக்கங்களை நிரப்பாமல் செய்தி களஞ்சியமாக --- தகவல் பொக்கிஷமாக
தினந்தினம் அதி அதிகாலையில் இல்லம் தேடி வந்து
இதம் தரும்... இனிமை தரும் சாதனை நிகழ்வு ஆச்சரியம் தானே?
படைப்பாளருக்கு
எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல் -- மறைமுகமாக திணிக்காமல் முழு சுதந்திரம் அளிப்பதோடு பேதம் எதுவும் பாராத சமத்துவ சிந்தனையில் சிறிதளவும் பிசகாமல்
செம்மை சிறப்போடு
வெளி வருவது ஆச்சரியம் தானே?
அப்புறம்?
அற்புதத்திற்கு வருவோம்.
செய்திகளை வகைப்படுத்தி
நெறிப்படுத்தி
நேர் படுத்தி வளப்படுத்தும் நேர்த்தி
அற்புதம் தானே?
இலக்கியப் பக்கங்களை
ஏனோ தானோ வென்று தேர்வு செய்யாமல்
வாசக உள்ளங்களை
செம்மைப் படுத்தும்
வகையில் -- செழுமைப்
படுத்தும் வகையில் --
பண்படுத்தும் வகையில் --பக்குவப் படுத்தும் வகையில்
பதிவு பண்ணி பரவசப் படுத்தும் நேர்த்தி அற்புதம் தானே?
நித்தம் நித்தம் கரும்பு சுவை கவிதைகளை
அனல் தெறிக்கும் ஆக்கப்பூர்வமான அக்னி கவிதைகளை --
நவரசம் ததும்பும் அறுசுவை நல்கும் அட்டகாச கவிதைகளை செழிக்க செழிக்க அள்ளி வழங்கி ஆனந்தம் பெருக்குவதும் அற்புதம் தானே?
அடுத்து...
ஆரோக்கியம்...
ஆய்ந்து ஆய்ந்து
அலசி அலசி
செய்திகளை வெளியிட்டு தனி மனித ஒழுக்கத்திற்கும்
சமூக நலனுக்கும்
உத்தரவாதம் அளிக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் வருகை ஆரோக்கியம் தானே?
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தினசரி
புகழ்பெற்ற பழம் பெரும் தலைவர்களின் வரலாறை சித்திரச் சிறப்போடு ஆகச் சிறந்த சரித்திரத் தகவல்களை அள்ளி அள்ளி வழங்கி,
வாசக சொந்தங்களின்
உள்ளங்களை வானளவுக்கு ஏற்றி வைக்க முனையும் பெருமை மிக்க செயல் ஆரோக்கியம் தானே?
ஆகவே தமிழ் நாடு இ பேப்பரின் பெருமைகளை வாசக சொந்தங்கள் நித்தம் நித்தம் பேசி மகிழ்வதில் ஆழமான அர்த்தச் செறிவு உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து உவகை அடைய வேண்டும்.
இன்றைய குட்டிக் கதைக்கு வருவோம்.
ஒரு மகா மகா பலசாலி
ஒரு ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
இதை நான்கு திருடர்கள் சேர்ந்து நின்று பார்த்தனர்.
நான்கு பேரும் இணைந்து நின்று எத்தனித்தாலும் அந்த பயில்வானிடம் இருந்து அவர்களால் ஆட்டைப் பறிக்க முடியாது. எப்படி யாவது ஆட்டை ஆட்டயப் போடவும் வேண்டும்.தீவிரமாக
யோசித்தனர்.ஜோரான ஐடியா சிக்கியது.
துல்லிய தாக்குதலுக்குத் தயாராகி விட்டனர்.
பயில்வான் ஆட்டை ஹாய்யாக சுமந்து
பாட்டுப் பாடியவாறு வந்து கொண்டிருந்தான்.
அவன் எதிரே அந்த நால்வரில் ஒரு ஆசாமி
வந்தான். பயில்வானையும் ஆட்டையும் மாறி மாறி பார்த்தான்.
" தலைவரே..ஓநாயை தோளில் போட்டுக் கொண்டு வர்றீங்களே?" என்றான் சற்று பதை பதைப்போடு.
உடனே பயில்வான், " அப்படிலாம் இல்லையே...நான் என்னோட செல்ல ஆட்டைத் தான் தூக்கிட்டு வர்றேன்..."
என்று சொல்லியவாறே, அவனை சட்டை செய்யாமல் நடந்தான்.
கொஞ்ச தூரம் சென்றிருப்பான்....
" அண்ணே... ஓநாயை
தூக்கிட்டு எங்கே போறீங்க?" என்று பதட்டம் நிரம்ப கேட்டான் ரெண்டாவது ஆசாமி.
இப்போது பயில்வான் சற்று யோசித்தவாறே
தோள் மேல் கிடந்த ஆட்டை உற்றுப் பார்த்தான், சந்தேகம் மிளிர...!
இன்னும் கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பான்...
மூன்றாவது ஆசாமி வந்தான்..
" என்ன தலைவரே ...
ஓநாயை தோள்ல போட்டுட்டு எந்தப் பக்கம் போறீங்க...?"
கேட்டதும் பயில்வான் நடப்பதை நிறுத்தினான்.
யோசிக்க ஆரம்பித்தான்.
திடீர்னு ஆட்டை கீழே இறக்கி விட்டு மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் தோள் மேல் ஏற்றி விட்டு நடக்க ஆரம்பித்தான்.
இப்போது அவன் நடையில் ஒரு வித தயக்கம்...விரக்தி...
பயம்...சந்தேகம் எல்லாம் இருந்தது.
இன்னும் கொஞ்ச தூரந்தான் நடந்திருப்பான்....
எதிர் பார்த்த படியே நாலாவது ஆசாமி எதிரில் வந்து நின்று
" ஓநாய்... ஓநாய்..." என்று சொல்ல,
பயில்வான் ஆட்டைக் கீழே தூக்கிப் போட்டு விட்டு சிட்டாய் பறந்தான், வெட்கம் தாங்காமல்.
இந்தக் கதை நமக்கு சொல்வது என்ன?
உள்ள உறுதி அதாவது
யாரும் அசைக்க முடியாத உள்ள உரம் கொண்டவன் தான் ஒரிஜினல் பயில்வான்.
உடல் அளவில் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் உள்ளம் உறுதியற்று இருந்தால் ஒரு பிரயோஜனமும் கிடையாது.ஆகவே
உள்ளம் உறுதிப்படுத்தும் கலையை நாம் கவனமாகக் கருத்தில் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு இ பேப்பர் வாசக சொந்தங்கள் அனைவரும் அத்தகைய எஃகு போன்ற ஆற்றலைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுவினர்
தெள்ளத் தெளிவாக
உணர்ந்து செயல் புரிந்து வருகிறார்கள்
என்பதை நித்தம் நித்தம் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
அன்பான ஆசிரியர் குழுவினர்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
வாழ்க வையகம்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்