tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-23.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-23.04.25

வணக்கம்


     23.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


    ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கண்டிக்கத் தக்கது.


   யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 23ம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பிடித்த சிவச்சந்தகரனுக்கு பாராட்டுகள்.


  மதுரை சித்திரை விழா நாட்களில் மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வேதனையளிக்கிறது.


  ஆன்லைன் முதலீடு மோசடி தொடர்பாக 12.சைபர் குற்றவாளிகளைக் கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. அவர்கள் மூலம் மற்றவர்களையும் கைது செய்து ஆன்லைன் மோசடியை முற்றுப்பெற வைக்க வேண்டும்.


 பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் விளக்கு வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு பாராட்டுகள். அத்தியாவசியத்திற்கு ஜெனரேட்டர் வேலை செய்வதை தினம் தினம் கவனித்து உறுதி செய்ய வேண்டும்.


  உலக புத்தகங்கள் தினம் கட்டுரையில் இடம்பெற்ற. புத்தகங்கள் அனைத்துமே பொக்கிஷம்.



 தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பெரிய காலாடி எனும் வெண்ணிக்காலாடியின் வீரமும் தியாகமும் மெய்சிலிர்க்க வைத்தது.


  பெரியவா அருள்வாக்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.


 குழந்தைகள் கைவண்ணம். பகுதியில் இடம்பெற்ற. ஓவியங்கள் அழகு.


  புத்தகங்கள் வாங்கி வாசித்து அதை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்து வாசிக்க உலக புத்தகதகன நாளான இன்று உறுதி ஏற்போம்.



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )