tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-25.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-25.04.25

வணக்கம்


     25.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


   பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக கண்டனம் தெரிவித்திருப்பது பாகிஸ்தானுக்கு விடுக்கும் எச்சரிக்கை. 


   பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் கூறியிருப்பது இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண அடியாக இருக்கும்.


  பஹல்காம் பயங்கரவாத இறுக்கமான சூழலில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது வன்மத்தின் உச்சம். இன்னும் திருந்தாத பாகிஸ்தானை ஐநா கண்டிக்க வேண்டும்.


  வார விடுமுறை பற்றி தெரியாது. என்று போலீஸ்காரர் நீதி மன்றத்தில் சொல்லி இருப்பதிலேயே தெரிந்து விடுகிறது அதன் உண்மைத்தன்மை. கொஞ்சம் கூடுதலாக போலீஸ் நியமனம் செய்து சுழற்சி முறையில் வாரவிடுமுறை வழங்க வேண்டும்.


  அமர்நீதி நாயனார் வரலாறு, சாஸ்தாவின் முக்கிய எட்டு அவதாரங்கள் கட்டுரைகள் ஆன்மீக அன்பர்களுக்கு வரப்பிரசாதம்.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் ம. சிங்கார வேலர் வரலாறு அன்னாரை பெருமைப்படுத்தும் விதமாக இருந்தது.


  தெய்வீக அருள் தரும் ஆன்மீகக் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பு



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )