மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான விழிப்புணர்வு நாள் என்பதை அறிவோம்.
இப்படிப்பட்ட குழந்தைகள் பிறப்பது அவர்கள் குற்றமல்ல. பெற்றவர்களின் தவறும் அல்ல.
சாதாரணமாக பிறக்கும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் குழந்தைகளை காட்டிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் மிக மிக முக்கியம். இரக்கமோ பச்சாதாபமோ அல்ல.
பல இடங்களில் பெற்றோர்களே வெறுக்கும் குழந்தைகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மன வேதனைக்குரியது.
வளர்ந்த பெண்களின் இப்படிப்பட்ட நிலை இயற்கை உபாதைகளையும் சேர்த்து மிகவும் கொடுமையானது. யாரை நொந்து கொள்வது? இறைவனையா?
தன்னை அறியாமல் இவர்கள் செய்யும் தவறுகளுக்கு இவர்கள் முற்றிலும் பொறுப்பல்ல. அறிந்து செய்வது இல்லை.
ஒரு வீட்டில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைவுடனும், மற்ற குழந்தை, குழந்தைகள் நல்ல முறையில் பிறக்கும்போது அந்தக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும்.
குழநதைகளுக்குள் வேற்றுமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் இன்றுமுதல் ஒரு முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகளையோ பெரியவர்களையோ பார்க்கும்போது முடிந்தவரை உதவுங்கள். அன்பாக பேசுங்கள். ஆதரவுக்கரம் நீட்டுங்கள். உங்களில் ஒருவராக உணரச்செய்யுங்கள். கண்டிப்பாக மன நிம்மதியை உணர்வீர்கள். வாழ்க வளமுடன்.
-வி பிரபாவதி
மடிப்பாக்கம்